சென்னையில் சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் பேச்சு!
சென்னை, ஜன. 13 – உலக வாழ் தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நாள் விழாவைக் கொண்டாடிய தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றி என சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் விழா ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப் பொருளில் அயலகத் தமிழர் நாள் விழாவில் சிங்கப்பூர் உள்துறை – சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகம் பேசிய தாவது:
சிங்கப்பூரைப் போல் அனைத்து நாடுகளும் தமிழைப் போற்றி வளர்க்க வேண்டும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நாள் விழாவை கொண்டாட நட வடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு எனது நன்றி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சிங்கப்பூர் _ தமிழ்நாட்டுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது.
உலகின் மூத்த மொழி தமிழ்மொழி -_ தமிழ் மொழியின் பெருமை உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது முத்தமிழறிஞர் கலைஞரின் ‘பராசக்தி’ வசனம் இன்றும் பேசப்படுகிறது.-
முத்தமிழறிஞர் கலைஞரைப் போல் யாராலும் பேசவும், எழுதவும் முடி யாது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங் காற்றி வருகிறது.- முதலீடுகளை ஈட்டு வதில் தமிழ்நாடு முன்னணியில் உள் ளது. தமிழ்நாட்டின் ஜி.டி.பி. உற்பத்தி 400 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் வெற்றி நடைபோட்டால், அயலகத் தமிழர்கள் பெருமையடைவர். சிங்கப் பூரில் தமிழ் பேசும் மக்கள் 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். -சிங்கப்பூர் பள்ளிக ளில் தமிழ் மொழி பாடமாக உள்ளது.
சிங்கப்பூர் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி காணப்படுகிறது சிங்கப்பூரைப் போல் அனைத்து நாடுகளும் தமிழைப் போற்றி வளர்க்க வேண்டும் -. இவ்வாறு சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம் பேசினார்.
No comments:
Post a Comment