எனது 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்கு தாங்களும், அம்மா அவர்களும் வருகை தந்து எங்களை வாழ்த்தியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நன்றி.
உங்களின் வாழ்த்துரையில் “கணவனின் பிறந்த நாளை கொண்டாடும் பழக்கம், மனைவியின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அவர்களுக்கு வயது 60, 75, 80 எல்லாம் வருகிறது. எனவே மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி அவர்கள் அருகில் கணவன் அமர வேண்டும்” என்ற கருத்து சிறப்பானது – சிந்திக்க வைத்தது.
இன்று பெரியகுளம் பால்ராஜ் என்ற நண்பர் தொலைப்பேசியில் பேசினார். “நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆசிரியர் அவர்கள் பேசிய போது மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி கணவன் பக்கத்தில் அமர வேண்டும்” என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது. “எனது மனைவிக்கு தற்சமயம் 74 வயது. 75ஆம் ஆண்டு ஆசிரியர் கூறியது போல விழா எடுப்பேன்” என்று கூறினார்.
“போடியில் ஒரு கட்சித் தொண்டனுடைய பிறந்த நாளை அக்கட்சியின் தலைவர் வந்து தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கியதாக இதுவரை நடந்தது இல்லை. அதனை உங்கள் தலைவர் செய்திருப்பது புதிய வரலாறு” எனப் பாராட்டினார்.
நிகழ்ச்சியை சிறப்பித்த தங்களுக்கும், அம்மா அவர்களுக்கும் நன்றி.
– போடி ச. இரகுநாகநாதன்
தேனி மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment