பிரதமரை வரவேற்க ஆட்களை கொண்டு வந்த விவகாரம்
பணப் பிரச்சினை தகராறில்
பிஜேபி பிரமுகர்மீது வழக்கு : கார் ஓட்டுநர் கைது
சென்னை, ஜன.25 பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்பட நான்கு பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை கோட்டூர் புரம் பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள், பாஜக மாவட்ட துணைத் தலை வராக பதவி வகித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருவ தையொட்டி ஆட்களைத் திரட்ட சென்னை பெருங் கோட்ட பாஜக சார்பில் பலத்த ஏற்பாடு செய்யப் பட்டது.
இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் ஆட்களைத் திரட்ட லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப் பட்டதாக பரபரப்பு கிளம்பியது. இந்த நிலை யில், சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டா ளுக்கும், மகளிர் அணி யைச் சேர்ந்த நிர்வாகி நிவேதா என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் சிறீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர், ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த தேவியையும், அவரது தங்கை ஆண்டாளையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர்கள் படுகாய மடைந்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் பேரில், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் சிறீதர், மகளிர் அணி நிர்வாகி நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளிட் டோர் மீது கோட்டூர் புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்து மீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் போன்ற 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஓட் டுநர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment