புதுடில்லி, ஜன.12 மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று (11.1.2024) தொடங்கியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள் ளனர். இன்றும் இக்கூட்டம் நடை பெறுகிறது.
இந்த 2 நாள் கூட்டத்தில், மாநில அளவில் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்
துள்ளது.
No comments:
Post a Comment