போடிநாயக்கனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
போடி, ஜன.11 தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலனைப் பாதுகாக்கக் கூடிய அரசு. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போக்கு வரத்துத் தொழிலாளர் பிரச்சினையில் உரிய தீர்வைக் காணுவார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்..
நேற்று (10.1.2024) காலை போடிநாயக்கனூர் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தொழிலாளர் விரோத அரசு அல்ல!
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் ஒருபக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக, இந்த அரசு தொழிலாளர் விரோத அரசு அல்ல. தொழிலாளர் நலனைப் பாது காக்கக் கூடிய அரசுதான்.
முக்கிய முடிவை, தீர்வை காணுவார் முதலமைச்சர்!
அதே நேரத்தில், நிதி நிலைமையையொட்டித்தான் அவர்கள் பல நேரங்களில், பல செயல்களை செய்யவேண்டி இருக்கிறது. எதிர் பாராமல் பல சிக்கல்கள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட காரணங்களினால் முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து, இதற்குரிய முக்கிய முடிவை, தீர்வை காணுவார்.
ஏனென்றால், தொழிலாளர் நலத்தில், திராவிட முன்னேற்றக் கழக அரசு, எடுத்துக்காட்டான அரசாக இருக்குமே தவிர, அதற்கு விரோதமான அரசாக இருக்காது.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment