அசாம் தலைநகருக்குள் நுழைய ராகுல்காந்தி நடைப்பயணத்துக்கு தடையாம்!
கவுகாத்தி, ஜன.24- அசாம் தலைநக ருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி நடைப்பயணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் ஆவேசம் அடைந்த தொண்டர்கள், காவல்துறை தடுப்புகளை அடித்து நொறுக்கினர். ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நடைப்பயணம் நிறுத்தம்
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, மணிப்பூரில் கடந்த 14-ஆம் தேதி பாரத ஒற்றுமை நீதி நடைப் பயணத்தை தொடங்கினார். மும்பை வரை இந்த நடைப்பயணம் நடக்கிறது.
நேற்று முன்தினம் (22.1.2024) அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலத்துக்கு சென்ற நடைப்பயணம், நேற்று மீண்டும் அசாமுக்குள் நுழைந் தது. அசாம் தலைநகர் கவுகாத்தி நோக்கி தொண்டர்கள் புடைசூழ ராகுல்காந்தி பேருந்தில் வந்து கொண் டிருந்தார்.
ஆனால், கவுகாத்தி நகர எல்லையில் காவல்துறையினர் நடைப்பயணத்தை தடுத்து நிறுத்தினர். நகருக்குள் நுழைய அனுமதி மறுத்தனர். நகரில் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படும் என்று முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஏற்கனவே கூறியிருந்தார்.
தடுப்புகளை நீக்கினர்
நடைப்பயணம் தடுத்து நிறுத்தப் பட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அங்கு போடப்பட்டிருந்த காவல்துறை தடுப்புகளை நீக்கினர். பா.ஜனதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களை காவல்துறையினர் அப் புறப்படுத்த முயன்றபோது, இருதரப்புக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. பின்னர், தொண்டர்களிடையே ராகுல்காந்தி பேசியதாவது,
பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா. இதே பாதையில் சென்றுள்ளார் ஆனால் எங்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. நாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்.
பயப்பட மாட்டார்கள்
நாங்கள் காவல்துறை தடுப்புகளை உடைத்துள்ளோம். ஆனால் சட்டத்தை உடைக்க மாட்டோம். எங்கள் தொண் டர்கள் பயப்பட மாட்டார்கள். நாங்கள் காவல்துறை தடுப்புகளை உடைத்துள் ளோம். ஆனால் சட்டத்தை உடைக்க மாட்டோம். எங்கள் தொண்டர்கள், சிங்கங்களை போன்றவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.
அசாமில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்தி, விரைவில் காங்கிரஸ் அரசை அமைப்போம். காவல்துறையினர் தங்கள் கடமையை சரியாக செய்தனர். மேலிட உத்தரவை பின்பற்றினர்.
நாங்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. முதலமைச்சர்க்குத்தான் எதிரானவர்கள் அவருடன்தான் எங்கள் போர் நடக்கிறது.
-இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து, நடைப்பயணம் மாற்று பாதையில் சென்றது. நாளை (25.1.2024) வரை நடைப்பயணம் அசாம் மாநிலத்திலேயே நடக்கிறது.
உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்
முன்னதாக, அசாம் மாநிலத்தை ஒட்டி, மேகாலயா மாநிலம் போய் மாவட்டத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ராகுல்காந்தி மாணவர் களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், பல்கலைக்கழகம் அந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்து விட்டது. அதையடுத்து, அசாம்-மேகாலயா எல்லையில், அந்த பல்கலைக்கழக மாணவர்களிடையே ராகுல் காந்தி பேசினார்.
நடைப்பயணம் செல்ல பயன் படுத்தும் பேருந்தின் உச்சியில் நின்றபடி அவர் பேசியதாவது:-
பல்கலைக்கழகத்துக்கு வந்து உங்களிடையே பேச நினைத்தேன். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர், அசாம் மாநில முதல்-அமைச்சரை தொலைபே சியில் தொடர்பு கொண்டு, நான் பல்கலைக்கழகத்துக்கு செல்ல விடாமல் தடுக்குமாறு உத்தரவிட்டார்.
அடிமை ஆக்க முயற்சி
அதன்பிறகு, அசாம் முதலமைச்சர் அலுவலகம், பல்கலைக் கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, ‘ராகுல்காந்தியை மாணவர்களுடன் பேச அனுமதிக்க வேண்டாம்’ என்று கூறிவிட்டது.
நீங்கள் நாட்டின் எதிர்காலம். நீங்கள் விரும்பியதை செய்ய அனு மதிக்கவேண்டும். உங்களை சுதந்திர மாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் உங்களை அடிமை ஆக்க நினைக்கிறார்கள். ஆனால், பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் அது நடக்காது என்றார் ராகுல். இதற்கிடையே, ராகுல்காந்திமீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு
இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளித்து அவர் கூறியிருப்பதாவது:-
காவல்துறை தடுப்புகளை உடைக் குமாறு கூட்டத்தை தூண்டி விட்ட தற்காக உங்கள் தலைவர் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறை தலைமை இயக்குநர் ஜி.பி.சிங்குக்கு உத்தரவிட்டுள்ளேன். நீங்கள் வெளியிட்ட காட்சிப் பதிவும் ஆதாரமாக பயன்படுத்தப்படும்.
அசாம், அமைதியான மாநிலம். இதுபோன்ற நக்சலைட் தந்திரங்கள், எங்கள் கலாசாரத்துக்கு முற்றிலும் முரணானது. உங்கள் செயல்பாடுகளால் கவுகாத்தியில் பெருமளவு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment