விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, ஜன.28 – விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவிட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதை தடுக்க கோரி சென்னை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக் கில் மனுதாரர் தரப்பில் “பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலை களை தயாரிக்க மதுரை கிளை தடை விதித்துள்ளது குறித்தும், விரி வான விளம்பரங்கள் கொடுத் தால் மட்டுமே இதுபோன்ற சிலைகள் செய்யாமல் தடுக்க முடியும் என கூறினார். மேலும் விநாயகர் சதுர்த் திக்கு சில நாட்களுக்கு முன் நட வடிக்கை எடுப் பதற்கு பதிலாக , முன்கூட்டியே நடவடிக்கை எது வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுக்குறித்து பதிலளித்த தமிழ் நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் முன்கூட்டியே நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளை கடைபிடித்து வருவ தாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப் பாயம் ” சிலை கரைப்பால் நீர்நிலை மாசுபடுவது மட்டுமின்றி கரைக்கப் படாத பாகங்கள் எடுக்கும் பொறுப்பு அரசுக்கு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் நடவ டிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழ் நாடு சுற்றுச் சூழல் துறை செயலா ளர் தலை மையிலான குழுவுக்கு தென் மண் டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித் துள்ளது. அனு மதி வழங்க வசூலிக்கப்படும் கட் டணத்தை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வும், அறிவிக்கப்படாத நீர் நிலை களில் சிலைகளை கரைத்தால் விதிக்கப் படும் அபராதம் குறித்து விளம் பரப்படுத்தவும் தென் மண் டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment