14-01-2024 நாளில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலம் பிராங்களின் நகரத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக திணை-அமெரிக்கா அமைப்பின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிராங்களின் நகர மேயர் திருமிகு.பில் கிரேமர், நகர உறுப்பினர்கள் திருமிகு ஷீபா உத்தின், திருமிகு அலெக்ஸ் கராசி தலைமையில் தமிழர்கள், அமெரிக் கர்கள் கலந்து கொண்டனர்.
திணை-அமெரிக்கா அமைப்பின் இயக்குனர் நியூ ஜெர்ஸி பாலா அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். “திரு பறை” குழுவை சேர்ந்தவர்கள் பறையிசையை ஆராவரமாக இசைத்தனர்.
பிராங்களின் நகர மேயரும், நகர கவுன்சில் உறுப்பினர் திருமிகு ராம் அன்பரசன் அவர்களும் இணைந்து பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி மாதத்தை “தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு” மாதமாக அறிவித்து அதன் வாழ்த்து பிரகடனத்தை திணை-அமெரிக்காவை சேர்ந்த நியூஜெர்ஸி பாலா, இளமாறன், கோசல் ஆகியோர் பெற்று கொண்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகத்தி லுள்ள தமிழர்கள் எவ்வாறு சமத்துவப் பொங்கலாக கொண்டாடுகின்றனர் என்று காணொலி வடிவில் மேயர், நகர உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்ட அனை வருக்கும் காண்பிக்கப்பட்டது. பொங்கல் திருவிழா எவ்வாறு அனைத்து மக்களுக்கான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டதாக மேயர் தெரிவித்தார்
பிராங்களின் நகரத்தை சேர்ந்த இளங்கதிர், இலக்கியா இருவரும் எவ்வாறு இந்திய வம்சாவளியை அமெரிக்க குழந்தைகள் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னார்கள். இந்த நிகழ்வினை திணை-அமெரிக்கா அமைப்பின் இயக்குநர் இளமாறன் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்வில் பிராங்களின் நகரத்தை சேர்ந்த கிருத்திகா, ஆதவன், குழலினி, கோசல், சந்துரு, விஜயன், ரியாஸ், பிராங் மற்றும் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர். நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
திணை-அமெரிக்கா மற்றும் பிராங்களின் நகர தமிழர்கள் மேயர் மற்றும் நகர கவுன்சில் உறுப்பினர் களுக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment