
தருமபுரி,ஜன.28- தருமபுரி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பாக தமிழர் தலைவர் பிறந்தநாள் மலர் சிறப்பாக வெளியிடப்பட்டது ..
தருமபுரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் கு. சரவணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட் டது.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலரை தலை மைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் வெளியிட மாவட்ட தலைவர் கு.சரவணன் பெற்றுக் கொண்டார்.
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பிறந்த நாள் மலர் தோழர்களுக்கு வழங்கப்பட்டு மிக சிறப் பாக விழா கொண்டாடப் பட்டது.
பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு சிறப்பு மலரை பெற்றுக்கொண்ட தோழர்கள்:
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் கு. சர வணன், மாவட்ட செய லாளர் பெ. கோவிந்தராஜ், ப. க. தோழர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி, .ப.க.துணைச் செயலாளர் அன்பரசு, தொழிலாள ரணி சிசுபாலன், வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா. மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, நகர தலை வர் கரு. பாலன், மேனாள் மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, சேட்டு மளிகை, சக்தி விநாயகா ட்ரே டர்ஸ், கனிமொழி கணினி மய்யம், ராஜாசுந்தரி மளிகை, ரங்கநாதன் தேங் காய் கடை, தோழர் அருணா பீமன், த.மு.யாழ் திலீபன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பு மலரை பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment