கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள இடம் கொடை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி-பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 14, 2024

கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள இடம் கொடை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி-பாராட்டு

featured image

சென்னை, ஜன. 14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம்மாள். இவர் கனரா வங்கி யில் ஊழியராக பணிபுரிந்து வருகி றார். பூரணம்மாளின் மகள் ஜனனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய நினைவாக கொடிகுளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தானமாக பூரணம் மாள் நிலம் வழங்கினார்.

ரூ.7 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகி றது. அந்த வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், பூரணம் மாளை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன்னுடைய சமூக வலைதள பக்கத் தில் கூறியிருப்பதாவது:-

“1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள் ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் மாளை வணங்குகிறேன்! போற்றுகி றேன்!. மதுரை ஒத்தக்கடை கொடிக் குளம் நடுநிலைப்பள்ளியின் ஆசிரி யப் பெருமக்கள் சார்பாகவும், அப் பள்ளியில் படிக்கும் வருங்கால அறி ஞர்கள் சார்பாகவும், பூரணம்மா ளுக்கு நன்றிகளை தெரிவித்து, அவ ரின் மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற் றுகிறேன். “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட் டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்” எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம்மாளின் தொண்டு மகத்தானது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி, வருகிற 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம்மாள் கவுரவிக் கப்பட உள்ளார்.” இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூரணம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நன்றியும் கூறினார்.

No comments:

Post a Comment