அரசு பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்புடைய நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

அரசு பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்புடைய நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது

featured image

சென்னை, ஜன.27- அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய மதுரை ஆயி அம்மா ளுக்கு முதல்-அமைச்ச ரின் சிறப்பு விருது, கள் ளச்சாராய ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார்.
முதல்-அமைச்சரின் சிறப்பு விருது
மதுரை மாவட்டம் கொடிக் குளத்தைச் சேர்ந்த ஆயி அம் மாள் என்ற பூரணம். இவர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள வங்கி ஒன்றில் எழுத்த ராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான ரூ.7கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தான் படித்த யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, தனது மகள் ஜன னியின் நினைவாக கொடையாக வழங்கினார். இதற் கான கொடை பத்திரத்தை கடந்த 8ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைத் தார். அவரது இந்த கொடையை பாராட்டி அவருக்கு குடியரசு தினத்தன்று முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (26.1.2024) நடந்த குடியரசு தின விழாவில் ஆயி அம்மாளுக்கு முதல்-அமைச் சரின் சிறப்பு விருது வழங்கப் பட்டது. இந்த விருதை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் வழங்கி னார்.
காந்தியடிகள் பதக்கம்
கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த மெச் சத்தக்கவகையில் பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசு தின விழாவில் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு – இந்த விருது விழுப்புரம் – மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சசாங்சாய், சென்னை மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு (தெற்கு) துணை காவல் கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு துணை ஆய்வாளர் பாண்டி யன், ராணிப்பேட்டை காவல் நிலைய அயல்பணி மத்திய நுண் ணறிவு பிரிவு தலைமைக் காவலர் ரங்கநாதன் ஆகியோருக்கு காந்தி யடிகள் பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார்.
சிறந்த 3 காவல் நிலையம்
அதுபோல் சிறப்பான பணி, குற்றங்களை குறைத் தல், உடனடி நடவடிக்கை ஆகிய செயல்பாட் டில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்-அமைச்சர் விருதின் முதல் இடத்தை மதுரை மாவட்டம் சி.3 எஸ் காவல் நிலையம் பெற்றுள்ளது.
அதற்கான பரிசு கோப்பையை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினி டம் இருந்து ஆய்வாளர் பூமி நாதன் பெற்றுக்கொண்டார். 2ஆம் பரிசை நாமக்கல் காவல் நிலையம் பெற்றதைத் தொடர்ந்து அதன் ஆய்வா ளர் சங்கர பாண்டி யன், 3ஆம் பரிசை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலை யம் பெற்றதால், பரிசு கோப்பையை அதன் ஆய்வாளர் வா.சிவம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment