மதுரை,ஜன.14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே யுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டி யன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லா குளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வரு கிறார்.
இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி வயது (30) இரண்டு ஆண்டு களுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு கொடையாக வழங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து கொடிக் குளம் அரசு நடுநிலைப் பள் ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு கொடையாக வழங்கினார்.
கடந்த 5ஆம் தேதி பள்ளி யின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
பின்னர் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டா ரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமை ஆசி ரியர் சம்பூர்ணம் ஆகியோர் முன்னிலையில், வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், முதன் மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா விடம் நிலம் கொடை வழங்கிய தற்கான ஆவணத்தை ஒப் படைத்தார். பெண் வங்கி ஊழியரின் இந்தச்செயலுக்கு அதிகாரிகள் அனைவரும் பாராட்டினர்.
இதுகுறித்து ஆயி என்ற பூரணம் கூறியதாவது:
நான் பிறந்த ஊர் கொடிக் குளம். எனது அப்பா எனக்கு வழங்கிய ஒன்றரை ஏக்கர் நிலத்தை கொடையாக வழங்கி யுள்ளேன்.
பல்வேறு உதவிகள்… எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் விபத்தில் இறந்தார். நான் மகளை பி.காம். வரை படிக்க வைத்து, இரண்டு ஆண் டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொடுத்தேன். குடும்பப் பிரச்சினையால் மகள் இறந்து விட்டார்.
எனது கணவர் இறந்த போது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன். எனது மகள் இறந்த போது யாருக்காக வாழ்வது என நினைத்தேன்.
எனது மகள் சொன்னபடி ஒன்றரை ஏக்கர் நிலத்தை பள்ளிக்குத் கொடையாக வழங்கியுள்ளேன். இதன் மூலம் எனது மகள்உயிருடன் வாழ்வ தாக கருதுகிறேன். வெளியே தெரியாமல் பலருக்கும் பல் வேறு உதவிகளைச் செய்து வருகிறேன். -இவ்வாறு ஆயி என்ற பூரணம் கூறினார்.
No comments:
Post a Comment