சென்னை,ஜன.24- தமிழ்நாட் டைச் சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீன வர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் இலங்கை கடற் படையினர் பறிமுதல் செய்துள்ள னர்.
கைது செய்யப்பட்ட மீனவர் கள் காங்கேசன் கடற்படை முகா மிற்கு அழைத்து செல்லப்பட் டுள்ளதாகவும், மீனவர்கள் ராமேசு வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகி யுள்ளது. மீனவர்கள் 6 பேர் சிறைப் பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் களை விடுவிக்க ஒன்றிய, மாநில அர சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
Wednesday, January 24, 2024
இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 6 பேர் கைது!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment