புதுடில்லி,ஜன.11- மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை வெளி யேற்ற 28 எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்துள்ள “இந்தியா” கூட் டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு வேலையில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.
கடந்த 7.1.2024 அன்று காங் கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகளின் தொகுதி பங்கீடு நிறை வடைந்த நிலையில், 8.1.2024 அன்று காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி உடன் தொகுதிப் பங்கீடு தொடர் பான கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் டில்லி ஒருங் கிணைப்பாளர் கோபால் ராய், “டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட் டணிக்கு தயாராக உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கின்றன. மேலும் வரவிருக்கும் மக்களவைத் தேர்த லுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க இவ்விரு கட்சி களிடையே 8.1.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் பேச்சு வார்த்தை சுமூகமாக நிறைவு பெற்றதால் டில்லி, பஞ்சாப், அரியானா, கோவா, குஜ ராத் ஆகிய 5 மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியில் காங் கிரஸ் உடன் இணைந்து போட்டி யிடும் நிலைப்பாட்டை எடுத்துள் ளோம். தொகுதிகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.
கூட்டணி தொடர்பாக ஆம் ஆத்மி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், காங் கிரஸ் கட்சி இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment