வஜிமா,ஜன.3- ஜப்பானில் நேற்று முந்தைய நாள் (1.1.2024) ஏற்பட்ட கடுமையான தொடர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம டைந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியை ஒட்டிய இஷிகவா மாகாணத்தின் சில பகுதி களில் நேற்றும் (2.1.2024) நில அதிர் வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ விலிருந்து 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஷிகாவா மாகாணத் தில், திங்கள்கிழமை பிற்பகலில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், குடி யிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடர்ச் சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் தொடர்ந்தன. பல பகுதிகளில் சாலைகள், குடிநீர்க் குழாய்கள், ரயில் பாதைகளும் சேத மடைந்தன. இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இஷிகவா மாகாணத் துக்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறைந்த அளவிலான சுனாமி எச்ச ரிக்கையும் ஜப்பான் அரசு விடுத்தது. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாது காப்பான பகுதிகளுக்குச் செல்லு மாறு ஜப்பான் அரசு எச்சரித்தது.
இந்த நிலநடுக்கத்தால் இஷிகவா மாகாணத்தில் 6-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும், அதில் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக வும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில், நிலநடுக்கத்தால் இஷிகவா மாகாணம் கடுமையான சேதத்தைச் சந்தித்திருப்பதும், ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். பலர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் 17 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்க தாக்கம் காரணமாக இஷிகவா மாகாணத்தின் சில பகுதிகளில் குடிநீர், மின் விநியோக மும், கைப்பேசி சேவைகளும் இரண் டாவது நாளாக தடைபட்டன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்திருப் பதும், சாலைகளில் கார்கள் தலை கீழாக புரண்டு கிடப்பதும், கடலில் கப்பல்கள் பாதி மூழ்கிய நிலையில் சேதமடைந்திருப்பதும் தொலைக் காட்சி செய்திகள் மூலம் தெரிய வந்தது.
‘பேரிடர் பகுதிகளில் மீட்புப் பணிகளில் 1,000 வீரர்களை ஜப்பான் ராணுவம் களமிறக்கியுள்ளது’ என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நேற்று (2_1_2024) தெரிவித்தார். ‘மக்களின் உயிர்களைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மக் களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ‘இஷிகவா மாகா ணத்தின் சில பகுதிகளில் மேலும் சில நாள்களுக்கு பெரிய அளவில் நில நடுக்கங்களும், நில அதிர்வுகளும் தொடர வாய்ப்புள்ளது’ என்று ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. அதோடு, பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ள தாகவும் கணிக்கப்பட்டிருப்பது மக்க ளிடையே மேலும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மாகாணத்தின் பல பகுதிகளில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி கலையரங்கங்கள், பள்ளிகள் மற்றும் சமூக நல மய்யங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
உதவத் தயார் – அமெரிக்கா: ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment