புதுடில்லி, ஜன.12 ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (11.1.2024) காலை வெளியிட்டபுள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,422 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராட்டி ராவில் இருவர், கருநாடகாவில் ஒருவர் என மூவர் உயிரிழந்தனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,33,409 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,44,83,502 பேர் குணம் அடைந்துள்ளனர். குண மடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. நாடு தழுவியஅளவில் இதுவரை 220.67 கோடிதடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ் வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த டிசம்பர் 5,2023 வரை தினசரி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100-க்கு குறைவாக இருந்தது. ஆனால் குளிர்காலம் காரணமாகவும் புதிய ஜேஎன்.1 வகை வைரஸ் தொற்றாலும் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment