தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்: கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி க.சொ.க.கண்ணன், துரை.சந்திரசேகரன் பரிசுகள் வழங்கி பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்: கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி க.சொ.க.கண்ணன், துரை.சந்திரசேகரன் பரிசுகள் வழங்கி பாராட்டு

featured image

அரியலூர், ஜன. 8- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் 30.12.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி எழுச்சியோடு தொடங்கியது.
பேச்சுப் போட்டியினை கல்லூரி முதல்வர் ஜோ. டோமினிக் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

பேராசிரியர்கள் ஆ. அருள், இ.வளன றிவு மாணவர்களை வரவேற்று வாழ்த்தி னார்கள். பேச்சுப் போட்டிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் மணமலர்ச்செல்வி, மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரிதமிழ்த் துறை தலைவர் முனைவர். சந்திரசேகரன் கீழப்பழூர் விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதுணை முதலமைச்சர் முனைவர் கிரேசி ராணி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தார்கள்.

15 கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங் கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். தேர்ந்தெடுக் கப்பட்ட 30 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டிக்கு வருகை தந்த மாணவர்களுடன் அந்தந்த கல்லூரியினுடைய பொறுப்பு பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2 மணி வரை போட்டி நடை பெற்றது. போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் கருத்து களை எடுத்துக் கூறி எழுச்சிகரமாக உரை யாற்றினார்கள்.
பங்கேற்ற மாணவர்களுக்கு காலையில் தேநீரும், மதியம் உணவும் வழங்கப்பட்டது. ஒரு மணி நேர இடைவேளைக்கு பிறகு சரியாக 3:00 மணிக்கு பரிசளிப்பு பாராட்டு விழா நிகழ்ச்சி மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க. சிவமூர்த்தி தலைமை யில் தொடங்கியது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ.நடராஜன் வரவேற் புரையாற்றினார்.
அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், அரியலூர் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் ,ஆசிரியரணி அமைப்பாளர் வி. சிவசக்தி கலைத்துறை அமைப்பாளர் சு. கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து தலை மைக்கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல் வன் நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர் களை அரியலூர் அரசு கலைக் கல்லூரி செய லர் முனைவர் ஸ்டீபன் , திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் பேராசிரியர் அருள் அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ் அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில்… மனிதர் கள் சுயமரியாதையுடன் வாழ பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தந்தை பெரியாரால் மொழி உரிமை இன உரிமை, சம உரிமை வகுப்புரிமை அனைத் தும் கிடைத்தது நாம் பெற்றிருக்கிற உரிமை களுக்கெல்லாம் காரணம் பெரியார். தனது வாழ்நாளின் இறுதிவரை தமிழ் சமூகத்தின் உயர்வுக்காக போராடியவர் பெரியார் அந்தப் பாதையில் மாணவர்கள் நடைபோட வேண் டும் என்று கூறி வாழ்த்தினார்.வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு கேட யம், சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை வழங்கி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர் க.சொ.கண்ணன் வாழ்த்தி சிறப்பு உரை யாற்றினார் .

அவர் தமது உரையில்…

தந்தை பெரியாரின் கருத்துகள் அமுத சுரபி போன்றது அள்ள அள்ள குறையாதது, அவர் மறைந்து 50 ஆண்டுகளுக்கு பின்னும் அவர் போற்றப்படுகிறார் பின்பற்றப்படுகிறார் அதை ஒட்டி இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறுகிறது பெரியார் மண்ணில் புதைக்கப் படிருக்கலாம். அவரது கருத்துகள் இந்த மண் ணிலே புதைக்கப்படவில்லை எங்கெங்கும் விதைக்கப்பட்டு இருக்கிறது அது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது வாழ்ந்தவர் கோடி மறைந் தவர் கோடி மக்களின் மனதிலே நிற்பவர் யார்? என்று பாடல் கேட்டிருப்பீர்கள் மக்களின் மனதில் நிற்பவர் பெரியார் என்று வரலாறு சொல்கிறது.

தமிழ்நாட்டின் முதல் முக்கியமான நபர் தந்தை பெரியார். பெரியாரைப் பேசாமல் எந்த அரசியல் கட்சியும் இயங்க முடியாது. இருக்க முடியாது மனிதன் பிறப்பது இறப்பது இயற்கை. ஆனால், யாருக்காக வாழ்கிறோம் என்பது முக்கியம்.

பெரியார் மக்களுக்காக வாழ்ந்தார். இந்த மண்ணிலே ஏற்றத்தாழ்வு கூடாது, கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், பேதம் இருக்கக் கூடாது என்பதையே தன்னுடைய லட்சியமாக கொண்டார் பெரியாரின் கொள்கையில் கடவுள் மறுப்பு முக்கியமானது முத்தமிழறிஞர் கலைஞர் கோயில் கொடிய வர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்று சொல்லுவார்.
நான் பரம்பரை திராவிடர் கழகத்துக்காரன் எனது அப்பா தாத்தா இருவருமே சுயமரியா தைக்காரர்கள் கடவுள் மறுப்பாளர்கள் எனது தந்தை இரண்டு முறை சேர்மன் ஆகவும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

எனது ஒன்றுவிட்ட தாத்தா தான் சுயமரியாதைச் சுடரொளி அணைக்கரை டேப் தங்கராசு.தேர்தல் அரசியலில் இருந்தா லும் நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை கைவிட்டதில்லை.மக்களுக்கு தொண்டு செய் வது தான் உண்மையான மகேசன் சேவை என்பதை திராவிட இயக்கம் எங்களுக்கு வழி காட்டியது. அதைத்தான் நாங்கள் கடை பிடித்து வருகிறோம். மக்களின் உயர்வுக்காக.

சம உரிமைக்காக என்றென்றும் உழைப் போம் என்று கூறி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் விநாயகா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெயா, மருத்துவக் கல்லூரி பேராசிரியை செந்தமிழ்பாவை, மீனாட்சி ராமசாமி கல்லூரியின் பேராசிரியர் மகா லட்சுமி, கீழப்பழுவூர் மீரா, மகளிர் கல்லூரி பேராசிரியர் உஷாராணி, வழக்குரைஞர்கள் சா.பகுத்தறிவாளன் மு.ராஜா, ஆசிரியர்கள் ராவணன், ராஜேந்திரன், அறிவழகன், முத்துக்குமரன் , பொறியாளர் அன்புச்செல்வி, அரியலூர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பழனிச்சாமி, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், வி.ஜி. மணிகண்டன், கமலக்கண்ணன், பாரிவள்ளல், தமிழ் களம் அரங்கநாடன், செந்தமிழ் வேல் பிரபு, கோபி, சக்தி, ரமணி, செல்வகுமார், சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் எஸ்.எஸ்.திராவிடச் செல்வன், முருகன், சாமி நாதன், சங்கீதா, கமலம், செல்வராசு, ஆனந்த் உள்ளிட்ட தோழர்களும் பங்கேற்று சிறப்பித் தனர்.
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் செயலாளர் ஆசிரியர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஹரிஹரனுக்கு பரிசுத்தொகை பத்தாயிரமும் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த பரிசுத் தொகையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நன்கொடையாக அளித்தார். இரண்டாம் பரிசினை மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அஸ்வினி தட்டிச் சென்றார். அவ ருக்கான பரிசுத்தொகை ரூபாய் 5000த்தினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நன்கொடையாக அளித் தார். மூன்றாம் பரிசு அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவன் கலைவாணன் பெற்றார். அவருக்கான பரிசுத்தொகை ரூபாய் 3000 அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின் னப்பா நன்கொடையாக அளித்தார். சிறப்பு பரிசினை கீழப்பழுவூர் விநாயகா கலை அறிவியல் கல்லூரிமாணவி ருவேதா பேகம் மீனாட்சி ராமசாமி கல்வியல் கல்லூரிமாணவி அகத்தியா ஆகியோர் பெற்றனர். இவர்களுக் கான பரிசுத்தொகை தலா 1000 ரூபாய். செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் செல்ல.கடம்பன் அளித்தார். போட் டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர் களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட் டது. அரியலூரில் சுவரொட்டிகள் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு நிகழ்ச்சி விளம் பரப்படுத்தப்பட்டிருந்தது.
அரியலூர் மாவட்ட மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.

No comments:

Post a Comment