ஆத்தூர், ஜன. 5- ஆத்தூர் கழக மாவட் டம் பகுத்தறிவாளர் கழகம் சார் பாக டிசம்பர் 24 தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி 28 .12. 2023 வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற் றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தமிழ் துறைத்தலைவர் (பொறுப்பு)முனைவர் மு.முருகேசன் வரவேற் புரை ஆற்றினார்.
ஆத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் வா.முருகானந்தம் தலைமை தாங் கினார்.
ஆத்தூர் கழக மாவட்ட செய லாளர் புத்தூர் நீசேகர், பகுத்தறி வாளர் கழக மாவட்ட பொறுப்பா ளர் ஆசிரியர் பெரியசாமி திரா விடர் கழக மாணவர் கழக செந் தமிழ் சேரன், வேம்பை விக்னேஷ், இலுப்பநத்தம் காளிதாஸ் பவுத்த பெரியசாமி, குரால் மைக்கேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா மாயக்கண் ணன் நோக்க உரையாற்றினார்
கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் மற்றும் தமிழ்த்துறை தலைவர் பொறுப்பு முனைவர் மு. முருகேசன் வாழ்த்துரை வழங் கினார்கள்.
முனைவர் பிரேம்குமார் முனைவர் வேலுச்சாமி உள்ளிட்ட இருபால் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்களும் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் பழனியப்பன் கலந்து கொண்டனர்.
இப்ப பேச்சுப் போட்டிக்கு தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் தமிழ்ச்செல்வன், முனை வர் உதயகுமார், மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் நடுவராக செயல் பட்டனர்.
இந்நிகழ்வில் ஆத்தூர் சுற்று வட்டாரக் கல்லூரி மாணவர் களும்,ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும், முது கலை, இளங்கலை தமிழ் இலக்கியத் துறை மாணவர்களுமாக 150 மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கு பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் 1.பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன். 2.பெரியார் ஒரு தொலைநோக்காளர். 3. பெரியார் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் என்ற தலைப்புகளில் அய்ந்து மணித்துளிகளில் பேசுவ தற்கான பேச்சுப்போட்டியில் 25 மாணவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் தேவியாக்குறிச்சி பாரதி யார் மகளிர் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த இளங்கலை வணிக நிர்வாகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி த.தனலட்சுமி முதல் பரிசை வென்று பரிசுத்தொகை ரூ.1500 பெற்றார் .
இரண்டாம் பரிசு பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதுகலை தமிழ் இலக்கிய முதலாம் ஆண்டுமாணவி சு.பூஜா ரூ.1,000 பரிசுத்தொகையை பெற்றார்.
மூன்றாம் பரிசு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலை தமிழ் இலக்கிய இரண்டாம் ஆண்டு மாணவி கோ.ரேணுகா பரிசுத்தொகை ரூ.500 பெற்றார்.
ஆறுதல் பரிசு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ் இலக்கிய முதலாம் ஆண்டு மாணவர் ஜோ.விண்ணரசன் பரி சுத் தொகை ரூ.500 பெற்றார்.
நிகழ்வில் கல்லூரி முதல்வருக் கும் (பொறுப்பு), தமிழ் துறை தலை வருக்கும் (பொறுப்பு), நடுவர்கள் ஆகியோருக்கும் பயனடை அணி வித்து மரியாதை செலுத்தப்பட் டது.பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேசிய அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக சோதிடப் புரட்டு என்ற நூலும் சுயமரியாதைத் திருமணம் ஏன் என்ற நூலும் அனைத்து மாண வர்களுக்கும் பரிசாக வழங்கப் பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக ஆத் தூர் பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக நன்றி ஆற்றினார்.
No comments:
Post a Comment