குடியாத்தம், டிச. 3- தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய்யத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் குடியாத்தம் போடிப்பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கில் நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாமிற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மா. அழகிரிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், திராவிடர் கழக மகளிரணி ந.தேன் மொழி, மாவட்ட துணைச் செயலாளர் ஆசிரியர் பெ. தனபால், நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன் பகுத்தறி வாளர் கழகம் ப. ஜீவானந்தம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சி.லதா, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் பெ.இந்திராகாந்தி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.இரம்யா, மாவட்ட இளைஞரணி தலைவர் பொ. தயாளன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இ . தமிழ்தரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு. சீனிவாசன், நகர மகளிர் பாசறை தலைவர் எ.ராஜகுமாரி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கலைவாணி, வேலூர் மாநகர பகுத் தறிவாளர் கழக செயலாளர் தி.க.சின்ன துரை, பேர்ணாம்பட்டு நகர பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பி.சுப்பிர மணி ஆகியோர்கள் முன்னிலை வகித் தனர்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண் டார்கள்.
கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மய்யம் வேலூர் கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தி.ச.முகமது சயி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து தன் உரையில் இறந்தவர்களின் உடலை மண்ணில் புதைப்பதாலும், தீயில் எரிப் பதாலும் எந்த நன்மையும் இல்லை. விழிக்கொடை வழங்குவதால் பார்வை இழந்த 8 நபர்கள் இறந்தவர்கள் கண் கள் மூலம் பலன்பெறுகின்றார்கள், உடற்கொடை அளிப்பதால் இறந்தவர் கள் உடல் மருத்துவம் படிக்கும் மாண வர்களுக்கு ஆராய்ச்சிக்காக பயன்படு கின்றது என்பது போன்ற கருத்துகளை எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர் குடியாத்தம் பாலாறு மருத்துவமனை மருத்துவர் எஸ். சிதம்பரம் தன் உரையில் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் இதுபோன்ற இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமாக இருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத் திற்கு பாடுபட்ட தலைவர் நினைவு நாளில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப் படுவது மிகவும் சிறப்பாகும் என்பது போன்ற கருத்துகளை எடுத்துரைத் தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு சித்த மருத்துவர், அரசு மருத்துவமணை பேணாம்பட்டு
மருத்துவர் சோ. தில்லைவாணன் தன் உரையில் சித்த மருத்துவத்தின் பலன்களையும், கண்களை பாதுகாப் பாக வைத்துக்கொள்வதின் முக்கியத் துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் நினைவை போற்றும் விதமாக இலவச சித்த மருத்துவ முகாமும் சிறப்பாக நடத்தலாம் என ஆலோசனை வழங்கினார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் தன் உரையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மனிதநேய அறக்கட்டளை துவங்கி அதன்மூலமாக மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கட்டணங்கள் செலுத்தி வருகிறோம், மேலும் அறக்கட்டளை மூலம் இறந்த வர்களின் விழிக்கொடை, உடற் கொடை தொடர்ந்து செய்து வருகிறோம் என தன் உரையில் தெரிவித்தார். கல்லூரி மாணவர்கள் தன்னார்வாளர்களாகக் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக முறைப் படுத்தினர்.
இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஒற்றைத் தலைவலி, தூரப் பார்வை கண்ணில் புரை நீக்குதல் கண்ணில் பூ விழுதல் மற்றும் கண்ணில் சதை வளர்ச்சி ஆகிய கண் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்றனர். இந்த மருத்துவ முகாமில் 50க்கும் மேற்பட்டோருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 21 நபர்கள் கண்ணில் புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்காக சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லப்பட்டார்கள்.
முகாமில் கலந்துகொண்ட அனை வருக்கும் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பசரன் குடும் பத்தின் சார்பில் அவரது தந்தையார் ந.இரத்தினம் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உணவு வழங்கப்பட்டது, இளைஞரணி மோ.அன்பரசன் அனைவருக்கும் தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார்.
நன்கொடை வழங்கிய குடியாத்தம் சத்யா மெஸ் உரிமையாளர், வெங்கிலி இரவிச்சந்திரன், குடியாத்தம் ஜீவா னந்தம் ஆகியோருக்கு திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மருத்துவ முகாம் முடிவில் குடியாத்தம் திராவிடர் கழகம் க.பரமசிவம் நன்றியுரை வழங்கினார்.c
No comments:
Post a Comment