பெங்களூரு, ஜன.29- கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் 21.1.2024 ஞாயிறு காலை 10:30 மணிக்கு பெங்களூரு தமிழ்ச் சங்க மூன்றாம் தளம், திராவிடர் கழகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் திராவிடர் திருநாள் பொங்கல் விழா – தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கருநாடக மாநில தலைவர் மு.சானகிராமன் தலைமையேற்ற உரை நிகழ்த்தி னார். செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்று, இணைப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வின் முதலாவதாக கழக காப்பாளரும், நாடக செம்மலு மான வீ.மு.வேலு கழக கொடியை, பலத்த கரவொலிக்கிடையே ஏற்றி வைத்தார். சென்னை – சோழிங்க நல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் உரு வப் படத்தினை திறந்து வைத்தார். துணை செயலாளரால் வழங்கப் பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தினை அரங்கின் நடுவில் வைத்து செய லட்சுமி. கஜபதி சிறப்பு செய்தார்.
கருநாடக மாநில கழக பொருளாளர் கு.செயக்கிருட்டி ணன், மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து வடக்கு மண்டலத் தலைவர் இள.பழனிவேல், வடக்கு மண்டல செயலாளர் சி.வரத ராசன், பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம், ஈ.ஜி.புரா தலை வர் கோ.சண்முகம், சிறீராம்புரம் தலைவர் எம்.ஆர்.பழம்நீ, இரா.பாஸ்கரன், இராசாசி, நகர் வே.பாவேந்தன், புதிய உறுப்பினர் தினேஷ் ஆகியோர் உரை நிகழ்த் தினார். கழக காப்பாளர் வீ.மு.வேலு (104 அகவை) உரை நிகழ்த்தினார்.
சென்னை – சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத் திரன், கழக செயல் திட்டங்கள், பெரியார் மேற் கொண்ட செயல் பாடு, போராட் டங்கள், பெரியார் அறிமுக்ம செய்து வைத்த திரா விடர் திருநாள் பொங்கல் விழா குறித்தும் அரிய விளக்கங்களுடன் உரை நிகழ்த் தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கை மற்றும் ‘சுயமரியாதை திருமணத்தை வழக்குரைஞர்களும் நடத்தி வைக்கலாம்‘ என உச்சநீதி மன்ற தீர்ப்பினை வரவேற்ற ஆசிரியர் அவர்களின் அறிக்கை நக லினை அனை வருக்கும் வழங்கினார்.
கழகத் தோழர்கள், ஆறு தோழர்கள் வழங்கிய விடுதலை ஓர் ஆண்டு சந்தா தொகை ரூ.12 ஆயிரத்தினை செயலாளர் இரா.முல்லைக்கோ காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரனிடம் வழங்கினார். மேலும், துணைத் தலைவர் பு.ர. கஜபதி அவர்களால் தயாரித்து வெளியிடப்பட்ட “காதல் புரட் சிக்கு கனிந்த வரவேற்பு” என்ற நூலும், செம்பரிதி தோழரின் “திராவிடத்தால் எழுவோம்“ என்ற நூல்களை தமிழர் தலைவர் அவர் களிடம் வழங்கிட காப்பாளர் அவர்களிடம் வழங்கப்பட்டது. பொதுவுடைமைப் பாவலர் கி.சு. இளங்கோவன் நிறைவாக சிறப்புரை நிகழ்த்தினார். மாவீரன் இலெனின் நினைவு, தந்தை பெரியார் குறித்த நெடிய விளக்கமும், திராவிடர் திருநாள் பொங்கல் விழா குறித்த நெடிய உரை விளக்கம் அளித்தார்.
நிறைவாக துணை செயலாளர் கு.ஆனந்தன் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்வினை நிறைவு செய்தார்.
காப்பாளர் வீ.மு.வேலு சர்க் கரை பொங்கல், வெண் பொங்கல் வழங்கினார். சிவசங்கர் சமோசாக் கள் வழங்கி சிறப்பித்தார்.
No comments:
Post a Comment