விருதுநகர். ஜன.22- அயோத்தி ராமன் கோவில் குட முழுக்கை யொட்டி இந்தியா முழுவதும் ரூ.500 கோடி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்ப தாக பட்டாசு உற்பத்தி யாளர்கள் சங்கத் தலை வர் கூறினார்.
அயோத்தியில் ராமன் கோவில் குடமுழுக்கு இன்று (22.1.2024) நடக் கிறது. குட முழுக்கு விழாவை பிரமாண்ட மாகக் போல் கொண் டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில் வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற் காக குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்.உத்தரப்பிரதேசம் உள் ளிட்ட 16 மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்ய ஒரு வார காலத் திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.500 கோடிக்கு விற்பனை
இதுகுறித்து சிவகாசி யில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற் பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் கூறிய தாவது.
அயோத்தியில் ராமன் கோவில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு வடமாநிலங்களில் பல இடங்களில் பட்டாசு விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதிக விற்பனையால் சில இடங்களில் பட்டாசுகள் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது, 2023ஆம் ஆண்டு தீபாவ ளிக்கு பின்னர் தொடர் மழை காரணமாக சிவ காசியில் பட்டாசு உற் பத்தி குறைவாக இருந்தது. இருந்தாலும் கடந்த தீபா வளியின் போது மீதம் இருந்த பட்டாசுகளும், தீபாவளிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகளும் வடமாநி லங்களுக்கு அனுப்பிவைக் கப்பட்டது.
தட்டுப்பாடு
இதனை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட மாநிலங்கள் 1 வார சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் பொதுமக்க ளுக்கு தேவையான பட் டாசுகள் முழுமையாக அனுப்ப முடியவில்லை. தற்போது அங்கு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. -இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment