மும்பை, ஜன.18 இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று (17.1.2024) ஒரே நாளில் 1,628 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமுக மாக இருந்து வந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் – சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் – நிப்டி ஆகியவை புதிய உச்சங்களை எட்டின.
இந்நிலையில் நேற்று முன் தினம் (16.1.2024) பங்குச்சந்தையில் லேசான சரிவு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2ஆ-வது நாளாக நேற்றும் பங்குச் சந்தை களில் கடும் சரிவு காணப்பட்டது. நேற்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 ஆகவும், நிப்டி 460 புள்ளிகள் சரிந்து 21,572 ஆகவும் நிலைபெற்றது.
கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 2.23%, நிப்டி 2.09% சரிந்தது. துறை வாரியாக பார்க்கும்போது, நிப்டி அய்.டி. ( 0.64%)தவிர மற்ற அனைத்து துறை பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக நிப்டி பேங்க் 4.28% சரிந்தது. உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் – எரிவாயு, வாகன துறைகள் 1 முதல் 3 சதவீதம் வரைசரிந்தன. இந்த சரிவால் முத லீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.33 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது. அதிக பட்சமாக எச்டிஎப்சி பங்குகள் விலை ஒரே நாளில் 8.16% சதவீதம் சரிந்தது. இதுவே நிப்டி கடுமையாக சரிந்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.
எச்டிஎப்சி வங்கியின் 3-ஆம் காலாண்டு முடிவு வெளியானது. இதில் நிகர லாபம்33% அதிகரித்த போதிலும், கடன் மற்றும் வைப் புத் தொகை விகிதாச்சாரம் சரிந்துள்ளது. இதுதவிர, பங்குச் சந்தைபுதிய உச்சத்தை எட்டிய தால், லாபத்தைஎடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்றதும் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment