சென்னை, ஜன.25 மக்கள்தொகையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக ளுக்காக மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தும் கோரிக்கைகள் அதி கரித்தன. அந்த வகையில் திருவண்ணா மலை மாவட்டத்திலிருந்து செய் யார் தனி மாவட்டமாக்க வேண் டும்.
திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி தனி மாவட்டம், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியை தனி மாவட் டமாக்க கோரிக்கை உள்ளது. அது போல் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள் ளிட்டோர் நகரங்களை கொண்டு புதியதொரு மாவட்டம் உருவாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவள்ளூரை பிரித்து பொன்னேரி மாவட்டமாக்கவும் கோரிக்கை எழுந் ததது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக புதிய மாவட் டம் அறிவிக்க கோரிக்கை எழுந் துள்ளது.
இந்த கோரிக்கையை பொது மக்கள் விடுத்திருந்தனர். மண்டல வாரியாக பார்த்தால் வடக்கு மண்டலத்தில் செய்யார், விருத்தாசலம், ஓசூர், பொனேரி, மத்திய மண்டலத்தை பொருத்தமட் டில் கும்பகோணம், மணப்பாறை, மன்னார்குடி, மேற்கு மாவட்டத்தை பொருத்தமட்டில் பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர் அல்லது எடப்பாடி தெற்கு மண்டலத்தை பொறுத்த வரை கமுதி, மேலூர், திருச்செந்தூர் அல்லது கோவில்பட்டி, சங் கரன்கோவில் ஆகிய மாவட்டங் களை பிரிக்க கோரிக்கை எழுந் துள்ளது.
இந்த நிலையில் நாளை குடியரசு நாள் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப் பட்டு ஆத்தூர் மாவட்டம் தனி யாக உதயமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 5 தாலுக்காக் களும் ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய 5 தாலுக் காகளுடன் ஆத்தூர் மாவட்டமாக வும் பிரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment