இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே பிறந்த நாள் இன்று! (03.01.1831)
ஜாதியின் பெயரால், பெண் என்பத னால் கல்வி மறுக்கப்பட்ட அனைவருக் கும் கல்வியினைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கை கொண்டு தீவிரமாக உழைக்கு ஒரு பெண்ணுக்கு ஒரு சமூகம் தரும் பரிசு என்னவாக இருக் கும்?
கல்வீசி காயப்படுத்துதலும், சாணங் களை வீசி அவமானப்படுத்துவதுமா? ஆம், அதைத்தான் செய்தது இந்த ஜாதிய சமூகம்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண் ணீர் மறுக்கப்பட்டது. ஆகையினால் அவர்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கண்டு, தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்டமக்களும் தண்ணீர் எடுக்க புலே இணையர் அனுமதித்தனர். கணவனை இழந்த 4 வயது சிறுமிக் குக்கூட தலை முடியை மழித்து விடும் கொடுமையான வழக்கம் நடை முறையில் இருந்தது.
இக்கொடுமைக்குக் காரணமானவர் களில் ஒரு சிலரே இக்கொடுமைகளை எதிர்த்து நிற்கும் அளவுக்குத் தீவிர மாகப் போராடி வெற்றி பெற்றார்கள் புலே இணையர்.
சாவித்திரிபாய் புலே நல்ல கவிஞ ரும் ஆவார். மராத்தியத்தில் நவீன கவிதைப் போக்கு இவரின் கவிதைகளி லிருந்தே தொடங்குகின்றது. டில்லி பல்கலைக் கழகத்தில்உலகளாவிய ஆய்வுகள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் பேராசிரியர் டாம் உல்ப் என்பவர், ஆயிகோஸ் என்ற உலகப் பத்திரிகையில், சாவித்திரிபாய் புலேவை “இந்திய பெண் கல்வியின் அன்னை” என்று குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயர் காலத்தில் குரு குலத்தில் குடுமி வைத்த குடுமிப் பார்ப்பனர்களே பஞ்சகட்சம் கட்டி கொண்டு பள்ளி ஆசிரியராக பரிண மித்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக் கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வியைப் போதித்த வீராங்கனை – முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே தான் . உண்மையில் ஆசிரியர் தினம் என்றால் இன்றைய நாளைத்தான் இந்தியர்கள் கொண்டாட வேண்டும்.
No comments:
Post a Comment