திருவனந்தபுரம், ஜன.2- கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆளுநரின் 30 அடி உயர உருவ பொம் மையை எரித்த மாணவ அமைப்பினரால் பரப ரப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா சார்பு உறுப் பினர்களை நியமித்து பல்க லைக்கழகங்களை காவி நிற மாக்க முயல்வ தாக கூறி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக எஸ்.எப்.அய். எனும் மாணவ அமைப் பினர் பல்வேறு போராட் டங்களை நடத்தி வரு கின்றனர்.
இந்த நிலையில் 31.12.2023 அன்று மாலை யில் ஆளுநருக்கு கண் டனம் தெரிவிக்கும் வகை யில் கண்ணூர் கடற்க ரையில் ஆளுநர் ஆரிப் முக மது கானின் 30 அடி உயர் உருவ பொம்மையை தீவைத்து எரித்து எஸ்.எப்.அய். மாணவ அமைப்பி னர். புத்தாண்டை கொண் டாடினர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கண் ணூர் டவுன் காவல்துறையினர் இந்த சம்ப வத்தில் தொடர்புடைய எஸ். எப்.அய். மாணவ அமைப் பின் மாநில தலைவர் அனுசிறீ உள் பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.எப்.அய். மாணவ அமைப்பின் மாநில தலைவர் அனுசிறீ கூறுகையில், ‘ஆளுநர் ஆரிப் முகமது கான், “கேரள மாநில பல்கலைக் கழகங்களில் மதத் திணிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர்களை செனட் உறுப்பினர்களாக நியமித் துள்ளார். அத்துடன் கண்ணூர் குறித்து அவ தூறாகவும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் விதத்தில் அவரு டைய உருவ பொம்மையை தீவைத்து எரித்து புத் தாண்டை கொண்டாடி னோம். இதனால் வருங் காலங்களில் பல்கலைக்கழ கத்தில் இதுபோன்ற செயல்களை ஆளுநர் கை விடுவார் என்று எதிர் பார்க்கிறோம்” என்றார்.
No comments:
Post a Comment