தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை ஜனவரி 23இல் கூடுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை ஜனவரி 23இல் கூடுகிறது

சென்னை, ஜன. 20- சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் வரும் ஜன.23ஆ-ம் தேதி அமைச் சரவைக் கூட்டம் நடக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரை யுடன் இம்மாதம் 3ஆ-வது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல், டிச 17, 18 தேதிகளில் அதிகனமழை, வெள்ளம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல், அதற்கான நிவாரணம் வழங்குதல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குதல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற் றும் ஆளுநருடனான கருத்துமோதல் உள் ளிட்ட காரணங்களால் பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜன.28ஆ-ம் தேதி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு முத லீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற் கொள்கிறார். தொடர்ந்து பிப்ரவரி முதல் வார இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 2ஆ-வது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் ஒன்றிய அர சின் பட்ஜெட் வரும் பிப்.1ஆ-ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், விரை வாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிப் பும் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசும் தனது 2024-2025ஆம் ஆண்டுக்கான பட் ஜெட்டை பிப்ரவரி மாதமே தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான், வரும் ஜன.23ஆ-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத் தில் முதலமைச்சரின் வெளிநாட்டுப்பயணம் தொடர்பாக விவாதித்து அமைச்சர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஆளுநர் உரை இறுதி செய்யப்பட உள்ளது.இதுதவிர, ஆளுநர் -அரசு இடையில் நிலவும் பனிப்போர் தற் போதும் தொடரும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் ஆளுநரை அழைப் பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப் பட வாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம் குறித்தும் இந்த கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது. முதல மைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல், ஏற் கெனவே தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கான சலு கைகள் வழங்குவதற்கான ஒப்புதல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது.

No comments:

Post a Comment