இந்தூர், ஜன.22 இந்தூ ரில் உள்ள ஒரு குழந் தைகள் காப்பகத்தில் 21 சிறாரை, காப்பக ஊழி யர்கள் சித்ரவதை செய்த சம்பவம் தற்போது வெளி யில் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநி லம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத் துக்கு மத்தியப் பிரதேச அரசின் குழந்தைகள் நலக் குழுவினர் (சிடபிள் யூசி) அண்மையில் திடீ ரென ஆய்வுக்குச் சென் றனர்.
அப்போது அங்கு தங்கியிருக்கும் சிறாரை, காப்பக ஊழியர்கள், நிர்வாகிகள் சித்ரவதை செய்வதாகவும், சிறு தவறுகளுக்குக் கூட கட்டி வைத்து அடிப்பதாகவும், ஆடைகளை களைந்து தலை கீழாகத் தொங்க விடுவ தாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து குழந் தைகள் நலக் குழுவினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத் தினர். இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் சித்ரவதை செய்துள்ளனர். சிறிய தவறுகளுக்குக் கூட தலை கீழாகத் தொங்கவிட்டுள் ளனர். இரும்புக் கம்பி யால் சூடும் போட்டுள்ள னர். கட்டி வைத்து அடித் துள்ளனர். மேலும் ஆடைகளைக் களைந்து புகை ப்படங்களையும் எடுத்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் முழு வதும் குளியலறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர்.
அடுப்பில் கார மிள காயைப் போட்டு அதை முகர்ந்து பார்க்குமாறு சிறுவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்அய்ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் காப் பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப் பினர் நடத்தி வருகின் றனர்’’ என்றார்.
இதுகுறித்து இந்தூர் கூடுதல்காவல்துறை ஆணையர் அமரேந் திரசிங் கூறும்போது, “தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், நம்பிக்கை இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழு வினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
No comments:
Post a Comment