பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி - 2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி - 2024

featured image

தஞ்சாவூர், ஜன. 20- தஞ்சாவூர், வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாளை (02.12.2023) முன்னிட்டு – பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 12.01.2024 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இக்கண்காட் சியை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தி லுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்ஏ.கே.வடிவேலு மற்றும் தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் டி..ரமேஷ்குமார் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, துணை முதல்வர் டாக்டர். அ.ஹேமலதா, துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். புதிய அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில் மாணவர்கள் எந்த அளவிற்கு தங்களை பொறுப் புடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால் உருவாக்கப்பட்ட திட்ட செயல்முறை படைப்புகள் மூலம் பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தனர்.

துறை வாரியாக மாணவர்களின் திட்ட செயல்முறை படைப்புகளை பார்வையிட்ட பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வல்லுநர் குழு (Expert Committee) சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படைப்புகளை (Project) பரிசுக்காக தேர்ந்தெடுத்தனர்.

துறைவாரியாக முதல் இடம் பெற்ற மாணவர்களின் விவரம்
கட்டட எழிற்கலை (Architectural Assistantship) துறையில் ஆர்.ஹரினி, ஜீ.ரதிபிரியா. ஆர்.யுவசிறீ. சி.முகிலா ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு “Bottle Pavilion” என்ற திட்ட செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினை பெற்றனர்,

மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் (ECE) துறையில் “Smart City Traffic Management System for Ambulance” என்ற செயல் முறை படைப்பிற்காக எஸ்.ஏ.சரன்சிங், எஸ்.எஸ்.ரஞ்சித், எஸ்.சுபாஷ், கே.வீரராகவன் ஆகி யோரைக் கொண்ட மாணவர் குழு முதலிடம் பெற்றது.
மாடர்ன் ஆபிஸ் பிராக்டீஸ் (MOP) துறையில் எஸ்.சுவாதி, கே.சந்தியா, ஆர்.நிவேதா ஆகி யோரைக் கொண்ட குழு “Nam Aarokyam Nam Kayil” என்ற செயல்முறை திட்டத்திற்கு முதல் பரிசினை பெற்றனர்.

அமைப்பியல் (Civil) துறையில் எஸ்.வீரக்குமார், கே.பாலாஜி, எம்.சேக் அப்துல்லா, ஏ.அகிலன் ஆகியோரைக் கொண்ட குழு”Under Water Tunnel With Waste Material Road”  என்ற செயல்முறை திட்டத்திற்கு முதல் பரிசினை பெற்றனர்.
மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) துறையில் எஸ்.சிவரஞ்சன், எஸ்.யுவன், டி.அபி மன்யூ, பி.அருண், வீ.சந்திரசேகரன், எம்.ரோகன் ஆகியோரைக் கொண்ட குழு “Solar Based Electric Vehicle Charging” என்ற திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.

கணினித்துறையில் (CT) எஸ்.செல்வின், கே.காந்திதாசன், வீ.எஸ்.விஜய், எம்.சி.அருண் மொழி, எஸ்.ரூப்பிரசன்னா ஆகியோரைக் கொண்ட குழு “Smoke Alarm System Using IOT” என்ற திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.
இயந்திரவியல் (Mechanical) துறையில் என்.அப்துல் கரீம், எம். அபிஜித், ஆர்.ராகுல், எஸ்.சாகித் ஃபவாஸ், எம்.ஜனார்த்தனன், ஆர்.மாத வன் ஆகிய மாணவர்கள் “Design and Fabrication of Coconut broom Stick Machine”  என்ற திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.

முதலாம் ஆண்டு (Year) எஸ்.டி.ஹரிஹரன் என்ற மாணவன் “Fire Fighting Robot” என்ற திட்ட படைப்புக்காக முதல் பரிசினை பெற்றனர்.
இக்கண்காட்சியை இக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் அறிவியல் பூர்வமாக தங்களது (Project) திட்ட செயல்முறை படைப்பு களை உருவாக்கிய அனைத்து மாணவ-மாணவி களையும் இக்கல்லூரி முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும் பாராட்டினார்கள். மேலும் எதிர்காலத்தில் சிறந்த பொறியாளர்களா கவும், பல்துறை வல்லுநர்களாகவும் தங்களை திறம்பட நிலைநாட்டிக்கொள்ள வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இக்கண்காட்சியினை இந்திய பொறியாளர் கூட்டமைப்பு (IE(I)) ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திருமதி க.ரோஜா அவர்களும் மற்றும் இயந்திரவியல் துறை பேராசிரியர் ஜெ.சுப்ர மணியன் அவர்களும் ஒருங்கிணைத்தார்கள்.

No comments:

Post a Comment