சென்னை,ஜன.20 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக அறிக்கை தயாரிப்பு குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட் டணிப் பேச்சுவார்த்தைக் கான குழு என 3 குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு
மக்களவைத் தேர்தலுக் கான அறிக்கை தயாரிப்பு குழு மக்களவை எம்.பி. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏகேஎஸ் விஜயன், சொத் துப் பாதுகாப்புக் குழு செய லாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழில் நுட்ப அணிச் செயலர் டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், எம்.பி. ராஜேஸ்குமார், மாணவர ணிச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான சிவிஎம்பி.எழிலரசன், மேயர் ஆர்.பிரியா ஆகி யோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு
மக்களவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக் கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டா லின் ஆகியோர் இடம் பெற் றுள்ளனர்.
தொகுதி உடன்பாடு- கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்திட, திமுக பொரு ளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, (முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (துணைப் பொதுச் செய லாளர்), க.பொன்முடி, (துணைப் பொதுச் செய லாளர்), ஆ.ராசா (துணை பொதுச் செயலாளர்), திருச்சி ந.சிவா (கொள்கைப் பரப்புச் செயலாளர்), எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 38இல் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.
தற்பொழுது 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வலுவான கூட்டணியோடு அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற திமுக வியூகம் வகுத்து வரு கிறது. அதன்படி, தேர்தல் அறிக்கை, தேர்தல் ஒருங் கிணைப்பு மற்றும் கூட் டணிப் பேச்சுவார்த்தை குழுக் களை அமைத்து திமுக தலைமை அறிவித் துள்ளது.
No comments:
Post a Comment