2016 - 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

2016 - 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, ஜன.29 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வ றிக்கை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

செய்தித் தாள், தொலைக் காட்சி என்ற ஊடகங்களை கடந்து பல்வேறு சமூக ஊட கங்கள் அதிகரித்துள்ளதால் இதுபோன்ற குழந்தை பாலியல் பலாத்கார நிகழ்வுகள் பற்றிய செய்திகள் அதிகம் வெளியுல குக்கு தெரிய வருகிறது. இந்தி யாவை பொறுத்தவரை பாலியல் வன்முறை என்றால் என்ன என்பது குறித்த சட்டவரை யறையில் மாற்றங்கள் செய்யப் பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவரின் புகார்களை காவல்துறை வழக்குப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில் 2016 முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந் தைகள் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் 96 சதவீதம் அதிகரித் துள்ளதாக குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவன மான(க்ரை) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து க்ரை நிறுவன ஆராய்ச்சி அதி காரி சுபேந்து பட்டாச்சார்ஜி, “இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. அனைத்து வகையான ஊடுருவல் தாக்குதல் களையும் உள்ளடக்கிய விரி வான ஆய்வில் 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தை பலாத்கார நிகழ்வுகள் 96.8 சதவீதம் அதிகரித்து உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவு களின்படி, 2016ஆம் ஆண்டில் 19,765, 2017இல் 27,616, 2018இல் 30,917, 2019இல் 31,132, 2020இல் 30,705, 2021இல் 36,381 மற்றும் 2022இல் 38,911 குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய வெளிப் படையான விவாதங்களை ஊக்குவிப்பது, சமூக தீர்ப்பு மற்றும் எந்த அச்சமுமின்றி பாதிப்பு குறித்து பேசுவதும், புகாரளிப்பதும் தற்போது அதிகரித்துள்ளது.

குழந்தை பாலியல் தவறாக செயல்படுதல் தொடர்பான நேர்மறையான விசாரணை, வழக்கு மற்றும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவளிப்பதில் சிக் கல்கள் நீடிக்கின்றன. பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப் புணர்வு காரணமாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டா லும், இந்த வழக்குகளை தடுக்க சட்டங்களை அமலாக்குவது, அதனை நீதித்துறை எவ்வாறு கையாளுகின்றன என்பதை மதிப்பீடு செய்வது அவசியம்” என்று இவ்வாறு தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment