சென்னையில் பிப்ரவரி 1ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மாணவர் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

சென்னையில் பிப்ரவரி 1ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மாணவர் பேரணி

கழக பொறுப்பாளர்கள் தோழர்களுக்கு வேண்டுகோள்
கல்வியைக் காப்போம்! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்!
இந்தியாவைக் காப்போம்!
பி.ஜே.பி.யை நிராகரிப்போம்!

ஒருங்கிணைந்த இந்திய மாணவர்களின் கூட்டமைப்பு (United Students of India) சார்பில் மாணவர் இயக்கங் களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (FSO-TN) ஒருங்கிணைக் கும் மாபெரும் மாணவர் பேரணி சென்னையில் பிப்ரவரி 1, 2024, காலை 9 மணிக்கு ராயபுரம் – செயிண்ட் பீட்டர்ஸ் மைதானம் முதல் ராபின்சன் பூங்கா வரை நடைபெற இருக்கிறது.
இதில் திராவிட மாணவர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தலை மைக் கழக அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட் டத் தலைவர்கள் – செயலாளர்கள், திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட மாணவர் கழகத் தலைவர்கள் – செயலாளர்கள் மாணவர்களைச் சென்னை பேரணிக்கு ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : பிப்ரவரி 1, 2024 மாலை 4.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் திராவிட மாணவர் கழகச் சிறப்புக் கருத்தரங்கத்தில் மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
– இரா.செந்தூரபாண்டியன்,
மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.
திராவிட மாணவர் கழகம் (DSF)
தொடர்புக்கு : 8754365832, 8248518474

No comments:

Post a Comment