18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் புற்றுநோய் பரிசோதனை திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் புற்றுநோய் பரிசோதனை திட்டம்!

featured image

சென்னை, ஜன. 24- இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக் கும் மேற்பட்டவர்களுக்குப் புற்று நோய் பரிசோதனை திட்டம் தொடங்கப் படுகிறது என்று தமிழ் நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
இந்தியாவில் 2030ஆ-ம் ஆண் டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க் கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால், தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கை களை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத் துறை செயல்படுத்தி யுள்ளது.
முதல்கட்டமாக, ஈரோடு, ராணிப் பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங் களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, அம்மாவட்டங்களில் வீடு, வீடாக அழைப்புக் கடிதத்தை சுகாதாரப் பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:
மூன்று விதமான புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக, வாய் புற்றுநோய் இரு பாலருக்கும் வருகிறது. அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவச மாக பரிசோதனை செய்து கொள்ள லாம்.
3 ஆண்டுக்கு ஒருமுறை கட் டாயம் மறுபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பக புற்று நோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகிய பரிசோதனை களை செய்து கொள்வது அவசியம் ஆகும்.
புற்றுநோயை பொறுத்த வரையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
அந்த வகையில், 4 மாவட் டங்களில், 19 லட்சம் பெண் கள்உட்பட 52 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இருக் கிறோம்.
அதன்பின், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பரி சோதனையை விரிவுபடுத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment