ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 17ஆவது ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 17ஆவது ஆண்டு விழா

featured image

 

ஜெயங்கொண்டம், ஜன. 27- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 17ஆவது ஆண்டு விழா 25-01-2024 அன்று மாலை 6 மணி அளவில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர்
எஸ். ஜெயா அவர்களும், அரியலூர் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் செல்வவிநாயகம் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர் . மேலும் கிருஷ்ணகுமார் (பெரியார் கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் சி.காமராஜ் (திராவிடர் கழகம்) அவர்களும், பெரியார் நிகர்நிலை பல்கலைகழகத்தின் பேராசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மொழிவாழ்த்து-பரதநாட்டியத்துடன் விழா இனிதே துவங்கியது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றி, நிகழ்விற்கு வந்திருந்தோரை வரவேற்று, சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்புச் செய்து நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தார்.
பள்ளியின் தாளாளர் வரவேற்புரையில், மாணவர்களுக்கு அறிவியல் எண்ணத்தை தூண்டும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியுடன் இணைந்து “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மன உளவியல் ஆலோசகர்கள் அவ்வப்போது பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படும் அய்யங்களை தீர்த்து வைக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 490க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 100% கல்வி கட்டணச் சலுகையும் 450க்கு மேல் பெற்ற மாணவர் களுக்கு 50% கல்வி கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சபாபதி அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுவருகிறது.
பல்வேறு வழிகளில் மாணவர்களுக்கு ரூ.29 லட்சத் திற்கு மேல் கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி மட்டுமில்லாமல் இணைப் பாடங்களான Abacus, Hand Writing, Communicative English, Music, Silambam ñŸÁ‹ NCC,NCG, JRC, Scout & Guide என்பவற்றால் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது.
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தினமும் நேரத்தை செலவிடுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பாடங்கள் மட்டுமன்றி பல்வேறு புத்தகங்களை; வாசிக்க வாசிக்க அவர்களின் திறன் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதனால் குழந் தைகள் மகிழ்ச்சி அடைந்து மேலும் சிறப்படைவார்கள் என்று சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் முதல்வர் ஆர்.கீதா 2023-2024 ஆம் கல்வியாண்டிற்குரிய பள்ளியின் சிறப்பு அம்சங்களை ஆண்டறிக்கையாக வாசித்தார்.
விழாவில் மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிய நாடகம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மாணவர்கள் நாடகமாக நடத்திக் காட்டினார்கள். மற்றும் இயற்கை உரத்தின் இன்றியமை யாமையை மவுன மொழி நாடகத்தின் மூலம் எடுத்து ரைத்தனர்.
மேலும் பெரியாரின் எழுச்சிமிகு சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இசையுடன் கூடிய பாடல் மூலமாக வும் மாணவர்கள் வெளிப்படுத்தினர். பார்வையாளர் களின் எண்ணங்களை தங்கள் வண்ணமிகு சிறகுகளால் சிறகடிக்க வைத்தனர் பள்ளி மாணவிகள். இது போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன மேலும் மாணவர்கள் ரோபோடிக்கின் பயன்பாட்டை மிகவும் துல்லியமாக எடுத்துரைத்தனர்
எல்கேஜி முதல் 11ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரி யாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக் கும், 2022-2023 வருகைப் பதிவில் 100 விழுக்காடு பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் கேட யம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கும், அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கி சிறப்பு செய்தனர். பள்ளியில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர் களுக்கும் ஊக்கத்தொகை வழங்கிச் சிறப்பித்தனர்
மேலும் சிறப்பு விருந்தினர்கள் தங்களுடைய சிறப்புரையில், மாணவர்கள் பிறருக்காக கல்வி கற்காமல் தனக்காக வாழ வேண்டும் – தன்னிடம் உள்ள திறமையை கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும் என்று எடுத்துரைத்தனர். பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனை வரும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் கூறினர். மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன என்று கூறி மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
நிகழ்வைப் பள்ளியின் 9ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினர். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது

No comments:

Post a Comment