தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு! - டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு! - டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தகவல்!

featured image

தருமபுரி, ஜன. 8- தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத் தின் மூலம் 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

05.01.2024 அன்று தருமபுரி ரயில் நிலையத்தை நேரில் பார் வையிட்ட அவர் பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “தருமபுரி ரயில் நிலையத்தில் 2004 ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்குப் பின்பு பெரிய அளவில் நடை மேடை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. தற்போது ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணி களுக்கு ஒதுக்கி உள்ளது. மக்க ளவை உறுப்பினர் என்ற முறை யில் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியதன் அடிப்படை யில் இத்தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. மக்கள் நலன் சார்ந்து நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. இந்தநிலையில்தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.15 கோடியில் மேற் கொள்ளப்பட உள்ளது.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட் டத்தில் தருமபுரி ரயில் நிலையத் திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. உயர் வகுப்பு பயணிகள் காத்திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுப்பயணிகள் காத் திருப்புக் கூடம் என மூன்று காத் திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நடை மேடையிலும் சுத்திகரிப்பு செய் யப்பட்ட குடிநீர் இயந்திரம், நவீன கழிப்பிட வசதிகள், தானி யங்கி நகரும் படிக்கட்டுகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட் டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரு கிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என் றார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார்.

No comments:

Post a Comment