13 ஆம் தேதி முதலமைச்சர்
தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஜன.4- 1,500-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை சங்கமம்
சென்னை சங்கமம் கலை விழா சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி சேலம், கோவை, மதுரை நெல்லை ஆகிய இடங்களின் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடத்த ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்க மம்-நம்ம ஊரு திருவிழாவை ஜனவரி 13ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க இருக்கிறார்.
1,500 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்
இந்த கலை விழா, 17ஆம்தேதி வரை சென்னையின் 18 இடங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 1,500-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.
இதற்கிடையே, சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா – ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 2.1.2024 அன்று நடந்தது. அரசு கூடுதல் தலைமைச் செய லாளர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர்-ஆணையர் காகர்லா உஷா, கலை பண் பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சென்னை சங்கமம் விழாவுக்கு தேவையான ஒத்துழைப்பை அனைத்துத் துறைகளும் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை குறித்த காலத் தில் செய்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டது.
மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை
நூறு சதவீதம் எண்ண வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
சென்னை, ஜன.4- மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டு களை நூறு சதவீதம் எண்ணக் கோரிய வழக்கில், இதே கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விவரத்தை சமர்ப்பிக்க தேர்தல் ஆணை யத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாக்கியராஜ் என்ப வர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக் காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்குகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் இணைக்கப்பட்டன. ஒரு தொகுதியில் 5 வாக்குச் சாவடிகளில் இந்த இயந் திரங்கள் பொருத்தப்பட்டு, ஒப்புகைச் சீட்டுக்கள் எண்ணப்பட்டன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலை யில், நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந் திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை நூறு சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 541 தொகுதிகளில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளைவிட, அதிக வாக்குகள் எண்ணப்பட்டன. அதேபோல 126 தொகுதி களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட முடிவு களில் குறைந்த வாக்குகள் எண்ணப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள இந்த குறைபாடுகள் காரணமாக, நிகழாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது. எனவே, தேர்தல் நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, ஒப்புகைச் சீட்டுகளை நூறு சதவீதம் எண்ண உத்தர விட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் 2.1.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இதே கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க, தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசா ரணையை ஜன. 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அமோனியா வாயுக் கசிவு :
காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை
பசுமை தீர்ப்பாயம் உறுதி
சென்னை,ஜன.4- சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற் சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொது மக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து எண்ணூர் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க முடிவு செய்தது.
அதன்படி, இந்த வழக்கு 2.1.2024 அன்று விசா ரணைக்குப் பட்டியலிடப்பட்டது. அப்போது எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமா னோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்படும். தொழில்துறை பாதுகாப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?; உர ஆலைகளில் அடிக்கடி ஆய்வு ஏன் நடத்தவில்லை என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment