புதுடில்லி,ஜன.31- வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங் களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 29.1.2024 அன்று அறிவித் துள்ளது. 13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள் ளது. மேலும், 2 மாநிலங் களைச் சேர்ந்த 6 உறுப்பி னர்கள் ஏப்ரல் 3ஆம் தேதி யுடன் ஓய்வு பெற உள்ளனர்.
இதையடுத்து, உத்தரப் பிரதேசம் (10), மகாராட்டிரா (6), பீகார் (6), மேற்கு வங்கம் (5), மத்தியப் பிரதேசம் (5), குஜராத் (4), கருநாடகா (4), ஆந்திரப் பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தராகண்ட் (1), சத்தீஸ்கர் (1), அரியானா (1) மற்றும் இமாச்சலப் பிர தேசம் (1) ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
அட்டவணையின்படி பிப்ரவரி 8இல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 15 என அறி விக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் பரி சீலனை பிப்ரவரி 16, வேட்பு மனுக்களை திரும்பப் பெறு வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு: வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 27 மாலை 5 மணிக்கும், தேர்தல் முடிவு பிப்ரவரி 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர் தல் ஆணையம் தெரிவித் துள்ளது. மாநிலங்களவை உறுப் பினருக்கான பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநில சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநிலங் களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
No comments:
Post a Comment