ரூ.134 கோடியில் மீன் இறங்கு தளங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

ரூ.134 கோடியில் மீன் இறங்கு தளங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.5 மீன்வளத் துறை சார்பில் ரூ.134.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்கு தளங்கள், 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் வடக்கு பகுதியில் ரூ.30 கோடியிலும், மயிலாடுதுறை – சின்னமேடு கிராமத்தில் ரூ.9.78 கோடியிலும் தூண்டில்வளைவுடன் மீன் இறங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – கோவளம் கிழக்கு கிராமத்தில் ரூ.3கோடியிலும், தூத்துக்குடி – கீழவைப்பாறில் ரூ.10 கோடியிலும் மீன் இறங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, ராமநாதபுரம் – தங்கச்சிமடத்தில் ரூ.8.95 கோடி, கன்னியாகுமரி – கீழமணக்குடியில் ரூ.29.50 கோடி, செங்கல்பட்டு – பழைய நடுக்குப்பம், புதுநடுக்குப்பத்தில் தலா ரூ.11 கோடி, கடலூர் – தாழங்குடாவில் ரூ.13.06 கோடி, மயிலாடுதுறை – வானகிரியில் ரூ.8 கோடியில் புதியமீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மொத்தம் ரூ.134.29 கோடியில் அமைக்கப் பட்டுள்ள 6 புதிய மீன் இறங்குதளங்கள், 4 மேம்படுத் தப்பட்ட இறங்குதளங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (4.1.2024) காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதுதவிர, நாகப்பட்டினம் – தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.4.50 கோடியில் கட்டப்பட்டுள்ள நிர்வாக கட்டடம் என ரூ.11.65 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

காவல்துறை கட்டடங்கள்

காவல்துறைக்கு ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ஆனைமலை, குமாரபாளையயத்தில் ரூ. 8.78 கோடியில் 62 காவலர் குடியிருப்புகள் உட்பட ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று (4.1.2024) திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment