சென்னை,ஜன.29- மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கரபாண்டியன் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சிய ராகவும், உயர்கல்வித்துறை துணை செயலாளர் கே.தர்பகராஜ் திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மின்னணு கழகத்தின் செயல் இயக்குநர் எஸ்.அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிய ராகவும், வணிக வரித்துறை இணை ஆணையர் (நிர்வாகம்) வி.ஆர்.சுப்பு லட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சிய ராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.குமர வேல்பாண்டியன் தோட் டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் டி.ரவிச்சந்திரன் உயர்கல்வித்துறை துணை செயலாள ராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ், வருவாய் நிர்வாகத்துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராக எஸ்.நடராஜன் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment