லக்னோ, ஜன. 26- உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் கங்கையில் புனித நீராட சென்ற 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கங்கை நதியில் புனித நீராட…
உத்த ரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட் டத்தை சேர்ந்த சிலர் ‘ஷாகாம்பரி பூர்ணிமா’ எனும் விழாவின் பெயரால் கங்கைநதியில் புனிதநீராடுவதற்காக பரூக்காபாத் நகருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவில் பெண்கள் உள்பட 12 பேர் பயணித் தனர். சுக்சுகி கிராமத் துக்கு அருகே உள்ள பரேலி-பரூக்காபாத் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்தது.
அப்போது சாலை யின் தவறான பக்கத்தில் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த சிலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இன்னும் சிலர் ஆட்டோ வுக்கும், லாரிக்கும் இடை யில் சிக்கி நசுங்கினர்.
ஆட்டோ லாரிக்கு அடியில் சிக்கிய நிலை யில், லாரி ஓட்டுநர் ஆட் டோவை விடுவிப்பதற் காக தனது வாகனத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தினார். அப்போது ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்து கிடந்தவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது.
இப்படி இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 12பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த னர். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியுடன் அங்கிருந்து தப்பி சென்றார்.
விபத்து குறித்து வழக் குப் பதிவு செய்து விசா ரணையை தொடங்கி யுள்ள காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment