கோத்ரா, ஜன.24- 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14பேர் கொடூ ரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ்பானு மற்றும் 2பேர்மட்டும் உயிர் பிழைத்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று 2008ஆம் ஆண்டு மும்பை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர்கள், முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2022 ஆகஸ்டு-15-ஆம் தேதி சுதந் திர தினத் தன்று குஜராத் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை பா.ஜனதா வினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
கொடூர குற்றவாளிகளின் விடுதலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது. இதற்கு எதிராக பில்கிஸ் பானு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், குற்றவாளிகளை முன்கூட் டியே விடுதலை செய்தது செல்லாது, எனவே அவர்கள் 11 பேரும் 2 வாரத்தில் சிறை திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும், 21.1.2024 அன்று நள்ளிரவில் பஞ்ச் மகால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந் தனர். அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர்.
No comments:
Post a Comment