11, 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

11, 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை, ஜன. 26- 11, 12ஆம் வகுப்பு களுக்கான தேர்வு குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவ லர்களுக்கு தேர்வுத் துறை இயக் குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.12 முதல் 24ஆம் தேதிக்குள் நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந் தது. தற்போது அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியி டப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.12 முதல் 17ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்.19 முதல் 24ஆம் தேதி வரையும் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.

இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண் களை பதிவுசெய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிக ளின் தலைமையாசிரியர்கள் பிப்.5 முதல் 17-க்குள் தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/)  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப் பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவல கங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
செய்முறை தேர்வுக்கான புறத் தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உட்பட வழி காட்டுதல்கள் முறையாக பின்பற் றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment