Ul உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசை 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

Ul உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசை 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்)

தமிழ்நாட்டில் தர வரிசை 6

*இந்திய அளவில் தரவரிசை 17

*பன்னாட்டு அளவில் தரவரிசை 412 

யுஅய் பசுமை மெட்ரிக் (UI Green Metric) - உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசையானது 2010ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியா பல்கலைக் கழகத் தால் (Universitas Indonesia), பல்கலைக் கழகங்களின் பசுமை மற்றும்  சுற்றுச்சூழல் நிலைத்தன்மையினை அளவிட்டு தர வரிசை அறிவிக்கப்படுகிறது.

உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை, மறுசுழற்சி நட வடிக்கைகள், நீர் மேலாண்மை, பசுமைப் போக்குவரத்து, பசுமைக் கல்வியமைப்பு மற்றும் பசுமை சார்ந்த ஆராய்ச்சிகள் ஆகிய அளவுகோல்களில் 39 குறிகாட்டிகள் மூலம், யுஅய் பசுமை மெட்ரிக்  (UI Green Metric)  தரப்பு உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசையினைத் தீர்மானிக்கிறது. 

நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசை அறிவிப்பு நேற்று (5.12.2023) துபாய் பாம் ஜுமைராவில்  வெளியிடப் பட்டது. இதில், IREG Obsevatory  எனப்படும் உலக கல்வி மற்றும் தரவரிசை கண்காணிப்பகத்தின் முதல்வர் பேராசிரியர் வால்டிமார் ஸ்வின்ஸ்கி சிறப்புரையாற் றினார். அப்போது அவர், உலகில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பசுமை சார்ந்த பொறுப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டு தரவரிசையில் இடம்பெற்ற நிறுவனங்களை வாழ்த்தினார். பின்பு, Ul GreenMetric  இன் துணைத் தலைவர் முனைவர் ஜுனைதி அவர்கள் தரவரிசைப் பட்டியலை வெளி யிட்டார்.

இதில் தமிழ்நாடு அளவில் 6ஆவது இடத்தையும், இந்திய அளவில் 17ஆவது இடத்தையும், பன்னாட்டு அளவில், 412ஆவது  இடத்தை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) பெற்றுள்ளது.   

No comments:

Post a Comment