டெங்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

டெங்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி நிலை

featured image

மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. பெரும்பாலா னோருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும்.
சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப் பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித் துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக் கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

பொதுவாக இந்தக் காய்ச்சல் முதல்முறையாக வரும் போது ஆபத்து வராது; 2ஆம் முறையாக வரும்போதுதான் ஆபத்து. கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் ஆபத்து விரைவில் வந்துசேரும். டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அது வரை ரத்தக்கசிவு, குறைரத்தஅழுத்தம், மூச்சிறைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத் திலேயே கண்ட றிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

No comments:

Post a Comment