கிருட்டினகிரி, டிச. 7- கிருட்டினகிரி மாவட்டம், ஊற்றங்கரை வட் டம் ,காரப்பட்டு கிராமத்தில் மிக எழுச்சியோடு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத் கர், ஆசிரியர் கி.வீரமணி ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 3.12.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பொதுக்கூட்டம் தொடங் குவதற்கு முன்பாக காரப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் அண்ணல் அம் பேத்கர் சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவ ரசன், தலைமைக் கழக அமைப் பாளர் கோ. திராவிடமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.
இக்கூட்டம் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் செ.பொன்முடி தலை மையில் நடைபெற்றது. பெரியார் பற்றாளர் சீ. அண்ணாமலை வரவேற்று பேசினார். கிருட்டின கிரி மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து.ராஜேசன் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.
முப்பெரும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் _- காரப் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பற்றாளர்கள், சுயமரி யாதை கலைக்கூட நண்பர்கள், மற்றும் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு குழு வீரர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரமாண் டமான கூட்டமாகும்.
கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே பெரிய மேடை அமைத்து சாலையின் இருபுற மும் கழக கொடிகள் கட்டி, சீரியல் மின்விளக்குகள் அமைத்து சாலையில் செல்வோர் அனை வரும் திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
சீரிய பெரியார் பற்றாளரு மான காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ப.ரமேஷ் அவர்கள் பேசுகையில்,
நான் ஒரு முறை பஞ்சாயத்து தேர்தலில் நின்ற போது எங்கள் ஊரில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதன் பிறகு பிரச்சார வேலையை தொடங்கினோம். சில தினங்களுக்கு பின் அந்த தேர்தல் நடைபெறாது என நீதிமன்றம் சொன்னது.
அப்போதுதான் புரிந்தது கடவுளை விட சட்டம் பெரி யது. சட்டத்திற்கு உட்பட்டது தான் கடவுளும் என்று உணர்ந் தேன்.நான் ஏராளமான பணத்தை செலவு செய்த பின் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எந்த கடவுளும் எனக்கு உதவவில்லை. அன்று முதல் நான் பகுத்தறிவுச் சிந்தனை யோடு செயலாற்ற தொடங்கி னேன் என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்த காவேரிப்பட்டினம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், மத்தூர் ஒன்றிய செயலாளர் கி.முரு கேசன், கிருட்டினகிரி ஒன்றிய தலைவர் த. மாது, பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலைவர் ச.கிருட்டினன்,மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறு முகம், மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட தலை வர் த.அறிவரசன், தலைமைக் கழக அமைப்பாளர் கோ. திரா விடமணி ஆகியோர் உரையாற் றினர். பகுத்தறிவாளர் கழக மாநில துணைபொதுச் செய லாளர் அண்ணா சரவணன் தொடக்க உரையாற்றினார்.
இறுதியாக கழக சொற் பொழி வாளர் பூவை. புலிகேசி சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்
காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோ.ரமாதேவி கோவிந் தன், வழக்கறிஞர் ந.ஜெயசீலன், பகுத்தறிவாளர் துணைச் செய லாளர் சித.அருள் ஒன்றிய இளை ஞரணி செயலாளர் தா. சிவக் குமார், துணை செயலாளர் சக்தி வேல், ராஜபாண்டி, ச.சதீஷ் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜேந் திர பாபு மகளிர் அணி மா.சிவசக்தி மாணவர் கழகத் தோழர்கள் செ.கலையரசி, மா.தேவிகா, மா.ரூபிகா மற்றும் ந.அருணகிரி தி.மு.க., இரா.இதய நாதன் தி.மு.க., அய்.சுப்பிரமணி விசிக, கே.சி.பெருமாள் விசிக, ரவிவர்மா விசிக, செ. மோகன் விசிக,த. ரஞ்சித் விசிக, மாணிக்.கவுதமன் விசிக, சி. சக்கரை காங்கிரஸ், சி. தமிழ்ச் செல்வன் காங்கிரஸ், சு.வெள்ளி காங்கிரஸ், பெரியார் பற்றாளர்கள் க.ஆறுமு கம், க.திருமால், ப.மாதேஸ்வரன், பலராம். ரஜினி, மு.கோவிந்தன்
வே.முருகேசன் மற்றும் ஏராள மான பொதுமக்களும் கழக தோழர்களும் கலந்து கொண் டனர்.
நிகழ்சியின் இறுதியாக இரா. செந்தில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment