வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

featured image

சென்னை, டிச. 22- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளின் அறிவுறுத்தலின்படி, தென் மாவட்டங்களில் பெய்த கனமழை கார ணமாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை வெளியிட்டது.

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினை தொடர்ந்து பொது மக் களுக்கு குடிநீர் வழங்கக் கூடிய நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சுத்தமான பாதுகாக்கப் பட்ட குடிநீர் மட்டுமே பருக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். கொதிக்க வைத்த ஆறவைத்த தண் ணீரையோ அல்லது குளோரினேசன் செய்யப் பட்ட தண்ணீரையோ மட்டுமே குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. குடிநீர் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் பாது காப்பினை உறுதி செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும். மேலும் வெள்ள நீர் உட்புகுந்த மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர், தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற் றிய பின்னரே உபயோ கிக்க வேண்டும். சுகாதார மற்ற குடிநீரை பருகுவ தால் வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட நீரி னால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ள தால் பொதுமக்கள் இந்த அறிவுரையை தவறாமல் பின்பற்றிடுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பாதிக்கப் பட்ட தண்ணீரை வழங் குவதை உறுதி செய்திட உள்ளாட்சித் துறை மற் றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள், மருத்துவ அலுவலர்கள், நீரியல் பகுப்பாய்வாளர்கள் மற் றும் சுகாதார ஆய்வாளர் கள் கொண்ட குழுவினர் களப்பணி ஆற்றி உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித் தார்.

No comments:

Post a Comment