புதுடில்லி, டிச. 10- வக்ஃபு வாரிய சட்டம் 1995-அய் திரும்பப் பெற வேண்டும் என்ற தனி நபர் மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் 8.12.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பாஜக உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ் கொண்டு வந்த இந்த தனி நபர் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, வக்ஃபு சட்டம் திரும்பப் பெறும் மசோதா 2022-அய் அறிமுகம் செய்வதற்கான வாக்கெ டுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பி னர்கள் 53 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 32 வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, இந்த மசோதாவை ஹர்நாத் சிங் யாதவ் அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் பின்னர் நடைபெற உள்ளது.
Sunday, December 10, 2023
வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபர் மசோதா அறிமுகம் காங்கிரஸ், தி.மு.க. எதிர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment