புதுடில்லி, டிச. 10- இளைஞர் களின் திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்பது இந் திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக மக்கள வையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
‘கரோனா தடுப்பூசிக் கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பிருக்க வாய்ப் புள்ளதா?’ என்று மக்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகா தார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெள்ளிக் கிழமை எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவர்களில் சிலர் திடீரென மரணமடைந்து உள்ளனர். ஆனால், இந்த மரணங்களுக்கான காரணத்தை உறுதிசெய்ய போதிய ஆதாரங்கள் இல்லை.
கரோனா பாதிப்புக்கு பிறகு இளைஞர்கள் மத் தியில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்த நிலையில், இது தொடர் பாக உண்மையைக் கண் டறிய அய்சிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயிய ல் நிறுவனம் 19 மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை பன்முக ஆய்வை மேற் கொண்டது.
2021, அக்டோபர் 1 முதல் 2023, மார்ச் 31 வரையிலான காலகட்டத் தில், இணை நோய்கள் எதுவும் இல்லாமல் திடீ ரென மரணமடைந்த 18 முதல் 45 வயதுடைய தனி நபர்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பாதிப்பு, தடுப்பூசி செலுத்தியது, கரோனாவுக்கு பிந்தைய உடல்நிலை, அவர்களின் குடும்பத்தில் ஏற்கெனவே திடீர் மரணம் நேரிட்டு உள்ளதா? இறப்புக்கு முந் தைய 48 மணிநேரத்தில் மது அல்லது போதைப் பொருள் பயன்படுத்தப் பட்டதா? கடுமையான உடற்பயிற்சி செய்தார் களா? என பல்வேறு விவரங்களைத் திரட்டி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் இளைஞர்கள் மத்தியில் திடீர் மரணம் நேரிடுவதற்கான அபா யத்தை கரோனா தடுப் பூசி அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட் டது. அதேநேரம், முன்பு கரோனாவால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தது, மரபு ரீதியிலான காரணம் மற்றும் குறிப்பிட்ட வாழ்க்கைமுறை பழக்கங் களால் திடீர் மரணம் நேரிடும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது என்று மாண்டவியா குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment