பட்டியலின - பழங்குடி பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

பட்டியலின - பழங்குடி பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு

புதுடில்லி,டிச.8- மோடி ஆட்சியில் பட்டியல் – பழங்குடி யினர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித் துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆண்டு குற்ற அறிக்கையையும், இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் தொடர்பான அறிக்கையையும் டிசம்பர் 3 அன்று வெளியிட்டது. இதில், ஒட்டு மொத்த குற்ற விகிதம் 2021-இல் 7 சதவிகித மாக இருந்தது, 2022-இல் 6.9 சதவிகித மாக சுமார் 0.1 சதவிகிதம் குறைந்துள் ளது என்றாலும், நரேந்திர மோடி தலைமை யிலான ஆட்சியில், பெண்கள் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சைபர் குற்றங்கள், 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4% அதிகரிப்பு 2022-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,45,256 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-அய் விட நான்கு சதவிகிதம் அதிகம். 2022-ஆம் ஆண்டு பிபிசி நிறுவனம் உலக சுகாதார அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் “உல களவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதாகவும் இந்த எண்ணிக்கை யும் இந்தியாவின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் கூறியுள்ளது”.

2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது 2016-ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளில் 26.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9.3% அதிகரிப்பு 2022-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1,62,449 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 8.7 சதவிகிதம் அதிகம்.
மூத்த குடிமக்கள், எஸ்.சி., எஸ்.டி.-க்களுக்கு எதிரான மற்றும் பொருளாதாரம் தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல்) மீது 28,545 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது, 2021-ஆம் ஆண்டை விட (26,110 வழக்குகள்) 9.3 சதவிகிதம் அதிகம். எஸ்.சி.-எஸ்.டி. -ளுக்கு எதிரான குற்றங்கள் 13.1% அதிகரிப்பு – பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்களுக்காக மொத்தம் 57,582 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 13.1 சதவிகிதம் (50,900 வழக்குகள்) அதிகம். பட்டியல், பழங்குடியினருக்கு எதிராக குற்றம் செய்ததற்காக மொத்தம் 10,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டை விட 14.3 சதவிகி தம் (8,802 வழக்குகள்) அதிகம். சைபர் குற்றங்களின் கீழ், 65,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2021-ஆம் ஆண்டை விட 24.4 சதவிகிதம் அதிகம்.

No comments:

Post a Comment