மும்பை, டிச. 3- தேசிய புலனாய்வு முக மையின் சிறப்பு நீதிமன்றம், செயல் பாட்டாளர் வரவர ராவுக்கு கண்புரை சிகிச்சை மேற்கொள்ள அய்தராபாத் செல்ல அனுமதியளித்துள்ளது.
நீதிபதி ராஜேஷ் கட்டாரியா தலைமையிலான அமர்வில் 29.11.2023 அன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா தலைநகருக்கு டிச. 5 முதல் 11 தேதிக்குள், இடது கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வரவர ராவ் செல்லலாம் என உத்தர விடப்பட்டுள்ளது.
அய்தராபாத்தில் எங்கு தங்கவிருக் கிறார், அவரின் பயண விவரங்கள், தங்குமிட முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றைத் தேசிய புலனாய்வு முகமைக்கு டிச.4ஆம் தேதி அன்று தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக் கப்பட்டுள்ளது.
2017, டிசம்பர் 31-ஆம் தேதி புனேவில் நடைபெற்ற எல்கர் பிரிஷத் மாநாட்டில் வரவர ராவ் பேசிய மறுநாள் பீமா கோரேகானில் வன்முறை நடைபெறக் காரணமாக அமைந்ததாகவும், இதற்கு மாவோயிஸ்ட் தொடர்பு இருப்பதாக வும் புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தெலுங்கு கவிஞரும் செயல்பாட்டாளருமான வரவர ராவைக் கைது செய்தனர்.
ஆகஸ்டு 2022, உச்ச நீதிமன்றம் மருத்துவக் காரணங்களுக்காக வரவர ராவுக்கு பிணை வழங்கியது.
கடந்த மாதம், உயர் நீதிமன்றம் வலது கண்ணில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சைக் குப் பிறகு திரும்பி வந்தவுடன் மற்றொரு கண்ணில் சிகிச்சை மேற்கொள்ள விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 பீமா கோரேகான் வழக்கைத் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment