திருச்சி, டிச. 9- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் இதய அடைப்பிலிருந்து துரிதமாக மீட்கும் முதலுதவியான உயிர் மீட்பு சுவாசம் (சிறிஸி) குறித்த சிறப் புக் கருத்தரங்கம் 06.12.2023 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பேராசிரியர் ஆர். காயத்ரி வரவேற் புரையாற்றினார். மகாத்மா கண் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. கோ. இரமணன் ஊடகங்களில் அதிகமான இளை ஞர்கள் இதய அடைப்பினால் இறக்கக்கூடிய செய்தியினை அதிக மாக பார்க்க முடிகிறது என்றும் உடற் பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் போது திடீர் இதய அடைப்புக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் உரையாற்றினார்..
மேலும் இதுபோன்ற உயிரிழப் புக்களை தவிர்க்க வேண்டும் என் றால். சரியான விழிப்புணர்வினை மாணவ சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் உயிர் மீட்பு சுவாசம் குறித்த ஒலி-ஒளிக்காட்சியினை இணையம் வாயிலாக நேரடியாக காட்சிப்படுத்துகிறது. இதனை மாணவ சமுதாயம் உற்றுநோக்கி மனித உயிர்களை மீட்க துரிதமாக செயல்பட வேண் டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாய்வழி சுவாசம்
மேலும் திருச்சி கி.ஆ.பெ.விஸ் வநாதம் மருத்துவக்கல்லூரியின் மயக்கவியல் துறை மருத்துவர் மரு. குணசேகரன் உயிர் மீட்பு சுவாசம் முதலுதவி செய்வதில் முக்கியமான படிநிலைகளை விளக்கினார். முத லில் மயக்கமடைந்த நபர் குறித்த சூழ்நிலை புரிதலை தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு சமமான தரையில் நேராக படுக்க வைத்து மார்பு பகுதியில் 5 முதல் 6 செ.மீ. வரை தொடர்ச்சியாக 30 முறை அழுத்த வேண்டும். கழுத்து மற்றும் வாய்ப் பகுதியை சுவாசம் தடை படாமல் நேராக வைத்து தொடர்ந்து இரண்டு முறை வாய் வழி சுவாசம் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது நம்முடைய உறவினராக இருந்தால் தொற்றுநோய்கள் ஏதும் இல்லாதவரா என்று உறு திப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நோய்கள் இருப்பினும், முன்பின் அறியாதவராக இருப் பினும் வாய்க்கவசம் அணிந்து சுவாசத்தை செலுத்த வேண்டும். குழந்தையாக இருப்பின் இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி மார்புப் பகுதியில் மெல்லிய அழுத் தம் கொடுக்கப்பட வேண்டும்.
திடீர் இதய அடைப்பு ஏற்பட்ட நபர்களுக்கு முதல் 5 நிமிடங்கள் முக்கியமான நிமிடங்கள். நாம் எந்த அளவிற்கு துரிதமாக செயல் படுகின்றோமோ, அந்த அளவிற்கு உயிர்கள் காப்பாற்றப்படும் என்று தெரிவித்து மாணவர்களின் கேள் விகளுக்கு விளக்கமளித்தார்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்து வக்கல்லூரியின் மருத்துவர் மரு. பிரவீனா, மரு. இரகுவரன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் க.அ.ச. முக மது ஷபீஃக் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment